யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் - அமைச்சர் சந்திரசேகர் 

Published By: Digital Desk 3

13 Jul, 2025 | 01:01 PM
image

யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கடல்போக்குவரத்து சேவை வழங்கும் படகுகளின் தரம் மற்றும் முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியன தொடர்பில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுமாறு பொலிஸ் மற்றும் கடற்படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும்  கூறினார்.   

நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுலாப்பயணிகளை ஏற்றும் சிறிய ரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் பயணிகள் 12 பேர் 02 பணியாளர்கள் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவதானித்த அவ்வழியே சென்ற  நெடுந்தீவு தனியார் படகான சபரிஷ் படகு பணியாளர்கள்  விரைந்து செயற்பட்டு சேசமடைந்த கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றியுள்ளனர். கடற்படையினரும் முழு வீச்சுடன் செயற்பட்டுள்ளனர். இவர்களுக்கு எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். 

கடல் பயணத்தின்போது பின்பற்ற வேண்டிய முன்பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளன. அவை முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ...

2025-12-08 02:33:22
news-image

அட்டமஸ்தானாதிபதி தேரரை ஜனாதிபதியை சந்தித்தார்

2025-12-08 01:10:56
news-image

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து நன்றி தெரிவித்த...

2025-12-07 22:47:34
news-image

தமிழகத்திலிருந்து கப்பலில் நாட்டை வந்தடைந்த நிவாரண...

2025-12-07 22:16:46
news-image

அலுவலக புகையிரதங்களைப் பயன்படுத்தியோருக்கான விசேட பஸ்...

2025-12-07 18:34:43
news-image

சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான...

2025-12-07 21:04:30
news-image

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நீர் வழங்கல்...

2025-12-07 18:13:48
news-image

கண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு - மக்களை...

2025-12-07 20:57:07
news-image

புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது...

2025-12-07 20:41:57
news-image

உணவுப் பொருட்களை வாங்கும்போது அவதானமாக இருக்குமாறு...

2025-12-07 18:36:26
news-image

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில்...

2025-12-07 19:48:12
news-image

சூறாவளி டிட்வா நிவாரணத்திற்காக அமெரிக்க விமானப்படையின்...

2025-12-07 19:35:08