(இராஜதுரை ஹஷான்)
பிரித்தானியாவினால் வழங்கப்பட்டுள்ள வரி சலுகையை இலங்கை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரித்தானியாவுக்கான பண்டங்கள் மற்றும் சேவைக்கான கேள்வியை அதிகரித்துக் கொள்வதற்கு கைத்தொழில் அமைச்சு விசேட திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் தலைவர் பேராசிரியர் காமினி வீரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும்.அமெரிக்காவின் இறக்குமதிக்கு சிறிதளவேனும் வரி வீதத்தை குறைத்திருந்தால் 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி மேலும் குறைவடைந்திருக்கும்.
அமெரிக்காவினால் 30 சதவீத தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில்,பிரித்தானியாவினால் இலங்கைக்கு புதிய வரி சலுகைவழங்கப்பட்டுள்ளன.
இதனை இலங்கை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு 6 சதவீதமளவில் தான் பண்டங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. புதிய சேவைகள் மற்றும் பண்டங்களை உருவாக்கும் வகையில் புதிய சந்தை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
பிரித்தானியாவுக்கான பண்டங்கள் மற்றும் சேவைக்கான கேள்வியை அதிகரித்துக் கொள்வதற்கு கைத்தொழில் அமைச்சு விசேட திட்டங்களை செயற்படுத்த வேண்டும்.
அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 30 சதவீத பரஸ்பர தீர்வை வரியினால் ஏற்படும் பாதிப்புக்களை முகாமைத்துவம் செய்வது குறித்து விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM