மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'உருட்டு உருட்டு' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் இயக்குநர்கள் விக்ரமன் -கஸ்தூரிராஜா -ஆர். வி. உதயகுமார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இயக்குநர் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'உருட்டு உருட்டு' எனும் திரைப்படத்தில் கஜேஷ், ரித்விகா ஸ்ரேயா, மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாளம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
யுவராஜ் பால்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருணகிரி - கார்த்திக் கிருஷ்ணன் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பத்மராஜு ஜெய்சங்கர் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சாய் காவ்யா - சாய் கைலாஷ் ஆகியோர் இணைந்து வழங்குகிறார்கள்.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' சமூக அக்கறையுடன் படத்தை கலகலப்பாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் உருவாகி இருக்கிறோம். அனைவரும் ஆதரவு தர வேண்டும் '' என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM