சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' பட அப்டேட்

Published By: Digital Desk 2

12 Jul, 2025 | 05:14 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் 'கூலி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'மோனிகா ' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படத்தில் ரஜினிகாந்த் , நாகார்ஜுனா , சத்யராஜ்,  உபேந்திரா , சௌபின் சாகிர் , சுருதிஹாசன் , காளி வெங்கட் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பொலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்ற ' மோனிகா பெலூச்சி..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான பிரத்யேக விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுத, பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான அனிருத் பாடகர் - அசல் கோலார் மற்றும் பின்னணி பாடகி சுப்லாஷினி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

இந்தப் பாடலும் அனிருத்தின் ஃபேவரைட்டான ஸ்டைலான துள்ளலிசை பாணியில் அமைந்திருப்பதால் ரசிகர்களிடத்தில் குறிப்பாக இணைய தலைமுறை ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அத்துடன் இந்தப் பாடல் வெளியாகி குறுகிய கால அவகாசத்திற்குள் ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனையும் படைத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17
news-image

அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:36:58
news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51