குருணாகல், திருகோணமலை பாடசாலைகளின் மாணவர்கள் குழு ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்

Published By: Digital Desk 2

12 Jul, 2025 | 07:53 PM
image

குருநாகல் மாவத்தகம மத்திய மகா வித்தியாலயமும், திருகோணமலை ஸ்ரீ கோணேஷ்வரா இந்து வித்தியாலயமும் சேர்ந்த மாணவர்கள், கல்விச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ‘Vision’ நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை (11) பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்த நிகழ்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்துடன் இணைந்து, “Clean Sri Lanka” வேலைத்திட்டம் மற்றும் அதன் கருத்தியல் ரீதியான பெறுமதி குறித்தும் மாணவர்களுக்கு  தெளிவுபடுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் கோமிக உடுகமசூரிய,

ஒரு பாட அறிவிற்கு மாத்திரம்  மட்டுப்படுத்திக் கொள்ளாமல், ஒவ்வொரு துறை தொடர்பிலும் ஆராய்ந்து புத்தாக்கத் துறையை வெல்லும் திறனை  சிறு வயதிலிருந்தே பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். தமது வாழ்வின் ஒவ்வொரு அனுபவத்தையும் ஆராய்வதன் மூலம் வாழ்வின் சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை சுட்டிக்காட்டிய பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, அடையாளப் பரிசாக குறித்த பாடசாலைகளுக்கு பெறுமதியான மரக் கன்றுகளையும்  வழங்கிவைத்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே. என். எம் குமாரசிங்க, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்புப் பிரிவின் பணிப்பாளர் எயார் கொமடோர் ஆசிரி கால்லகே, அதன் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல மற்றும் மாவத்தகம மத்திய மகா வித்தியாலயம் மற்றும்  ஸ்ரீ கோணேஷ்வரா இந்து வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய...

2025-11-15 15:14:08
news-image

மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை...

2025-11-15 19:39:33
news-image

வலையில் சிக்கிய அரிய வகை கடல்...

2025-11-15 14:58:45
news-image

செல்வ சந்நதியில் ஆலய சூழலில் சுகாதார...

2025-11-15 15:02:58
news-image

பாடசாலைக்கு அருகில் போதை மாத்திரைகளை விற்பனை...

2025-11-15 16:49:01
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-15 15:01:34
news-image

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-11-15 17:45:33
news-image

“கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான வங்கி கணக்குகள்...

2025-11-15 15:21:43
news-image

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு...

2025-11-15 16:09:03
news-image

டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை பேணிய...

2025-11-15 13:45:40
news-image

“பாணந்துறை குடு சலிந்து“வின் போதைப்பொருள் வலையமைப்பை...

2025-11-15 15:42:26
news-image

யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல்...

2025-11-15 13:19:06