மலேசியாவில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் விஜித்த ஹேரத்

Published By: Priyatharshan

12 Jul, 2025 | 01:06 PM
image

மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அங்கு ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்கே லாவ்ரொவ்வை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 58 ஆவது ஆசிய நாடுகள் சங்கம் (ASEAN) பிராந்திய கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மலேசியா சென்ற வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அங்கு ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கே லாவ்ரொவ்வை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்ததைகளை முன்னெடுத்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கை – ரஷ்ய உறவுகள் மற்றும் சர்வதேச அரங்கில் இரு நாடுகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு குறித்து முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

தெற்காசியாவில் ரஷ்யாவின் நம்பகமான தோழனாக இலங்கை நீண்ட காலமாக இருந்து வருவதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் லாவ்ரொவ் இதன்போது தெரிவித்துள்ளார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான மற்றும் நேர்மறையான வரலாற்றுப் பின்னணியை அவர் நினைவூட்டியதுடன், எதிர்கால ஒத்துழைப்புக்கான முன்மாதிரியாக இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் உறுதி வழங்கினார்.

முக்கியமான சூழ்நிலைகளில் இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய நட்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்காக நன்றி தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், மேலும், ரஷ்யாவுடன் கொண்டிருக்கும் வரலாற்று ரீதியான நட்புகளை பாராட்டியதுடன், பல துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த இலங்கை உறுதியுடன் இருக்கிறது என்றும் உறுதியளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள்...

2026-01-25 11:06:23
news-image

8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'...

2026-01-25 10:46:39
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள்...

2026-01-25 10:27:25
news-image

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து எதிரணியினருடன்...

2026-01-25 10:22:35
news-image

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான...

2026-01-25 10:16:46
news-image

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட...

2026-01-25 10:15:59
news-image

திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20 ஆவது...

2026-01-25 10:12:08
news-image

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை...

2026-01-25 10:03:18
news-image

ஊழல்களை மறைப்பதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம்...

2026-01-25 09:58:46
news-image

கல்வி சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சி...

2026-01-25 09:53:40
news-image

கொழும்பு மாவட்ட அபிவிருத்திப் பணிகள் 97%...

2026-01-25 09:20:13
news-image

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெசல்வத்தே...

2026-01-25 09:19:51