இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணி இலங்கை அணிக்கு 388 என்ற கடின இலக்கை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆர்.பிரேமதாச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றுவரும் இரு அணிகளுக்குமிடையிலான  டெஸ்ட் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய சிம்­பாப்வே அணி முதல் இன்­னிங்ஸில் 356 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. இதில் அபா­ர­மாக ஆடிய எர்வின் 160 ஓட்­டங்­களைக் குவித்தார்.

பின்னர் இலங்கை அணி முதல் இன்­னிங்ஸை தொடங்­கி­யது. திமுத் கரு­ணா­ரத்ன மற்றும் உபுல் தரங்க ஆகியோர் தொடக்க வீரர்­க­ளாக கள­மி­றங்­கி­னார்கள்.  திமுத் கரு­ணா­ரத்ன 25 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் ஆட்­ட­மி­ழக்க, அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 11 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார்.

மறு­மு­னையில் அரை­ச் சதம் கடந்த உபுல் தரங்க 71 ஓட்­டங்­க­ளுடன் ரன்­அவுட் மூலம் ஆட்­ட­மி­ழந்தார். அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் 55 ஓட்­டங்­க­ளு­டனும், முன்னாள் அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் 41 ஓட்­டங்­க­ளு­டனும், தில்­ருவான் பெரேரா 33 ஓட்­டங்­க­ளு­டனும் வெளி­யேற, இலங்கை அணி 2ஆ-வது நாள் ஆட்­ட­நேர முடிவில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 293 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது. 

அசேல குண­ரத்ன 24 ஓட்­டங்­க­ளு­டனும், ரங்­கன ஹேரத் 5 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் இருந்­தனர். 

இலங்கை அணி 63 ஓட்­டங்கள் பின்­தங்­கிய நிலையில் நேற்று தனது ஆட்­டத்தை தொடர்ந்­தது. 5 ஓட்­டங்கள் பெற்­றி­ருந்த ரங்­கன ஹேரத் 22 ஓட்­டங்­க­ளு­டனும், அசேல குண­ரத்ன 45 ஓட்­டங்­க­ளு­டனும் ஆட்­ட­மி­ழந்­தனர். நேற்றுக் காலை போட்டி ஆரம்­பித்த ஒன்­றரை மணிநேரத்­திற்­குள்­ளேயே இலங்கை அணி மீத­மி­ருந்த மூன்று விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து  346 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது. இதனால் சிம்­பாப்வே அணியை விட 10 ஓட்­டங்கள் பின்­தங்­கி­யது.

இதனைத் தொடர்ந்து தனது இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்­தது சிம்­பாப்வே. இலங்கை அணி பந்­து­வீச்­சா­ளர்­களின் துல்­லி­ய­மான பந்­து­வீச்சால் மஸ­கட்சா (7), சகப்­பவா (6), முஸ­கண்டா (0), கடந்த போட்­டியில் 160 ஓட்­டங்­களை விளாசி இலங்கை அணியை திண­ற­டித்த எர்வின் (5) என அடுத்­த­டுத்து ஆட்­ட­மி­ழக்க சிம்­பாப்வே அணி 23 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­டுக்­களை இழந்து இக்­கட்­டான நிலைக்கு தள்­ளப்­பட்­டது. அடுத்து வந்த வில்­லி­யம்ஸும் 22 ஓட்­டங்­க­ளுடன் ஹேரத்தின் பந்தில் ஆட்­ட­மி­ழக்க 59 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்­கெட்­டுக்­களை இழந்து திண­றி­யது சிம்­பாப்வே.

அத்­தோடு நேற்று மூன்றாம் நாள் பகல் நேர இடை­வே­ளைக்­காக ஆட்டம் நிறுத்­தப்­பட்­டது. உணவு இடை­வே­ளையின் பின்னர் சிம்­பாப்வே அணி சொற்ப ஓட்­டங்­க­ளுக்குள் ஆட்­ட­மி­ழந்­து­விடும் என்று பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் அதற்குப் பிற­குதான் சிம்­பாப்வே தனது ஆட்­டத்தை ஆரம்­பித்­தது. 

சிகண்டர் மற்றும் மூர் ஜோடி சேர்ந்து சரி­வி­லி­ருந்து அணியை மீட்­டனர். இரு­வரும் சிறப்­பா­ன­தொரு இணைப்­பாட்­டத்தை ஆடி அணியின் ஓட்ட எண்­ணிக்­கையை 145 வரை உயர்த்திக் கொண்டு போக இந்த ஜோடியை பிரித்தார் லஹிரு குமார. மூர் 40 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார்.

இத்­துடன் சிம்­பாப்வே கதை முடிந்­தது என்று மகிழ்ச்­சி­ய­டை­வ­தற்குள் அடுத்து வந்த வெல்லர் சிகண்டர் ரசா வுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேற்­றைய 3 ஆம்  நாள் ஆட்ட நேரம் முடி­யும்­வரை நங்­கூ­ர­மிட்­ட­துபோல் களத்தில் நின்று இலங்கை அணி பந்­து­வீச்­சா­ளர்­களை வெறுப்­பேற்­றியது.

இதனால் சிம்­பாப்வே அணி 252 ஓட்­டங்கள் வரை சேர்த்­தது. சிகண்டர் ரசா 97 ஓட்­டங்­க­ளு­டனும், வெலர் 57 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் இருந்தனர்.

இன்றைய 4 ஆம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த சிம்பாப்வே அணி சிகண்டர் ரசாவின் சதத்தின் உதவியுடன் அனைத் விக்கெட்டுகளையும் இழந்து 387 என்ற வலுவான ஓட்ட இலங்கை இலங்கை அணிக்கு கொடுத்துள்ளது.

2 ஆவது இன்னிங்ஸில் சிம்பாப்வே அணியின் சிகண்டர் ரசா 127 ஓட்டங்களையும் வெல்லர் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ரங்கண ஹேரத் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

388 என்ற கடின வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களைப்பெற்றுள்ளது. 

இதேவேளை, நாளை போட்டியின் 5 ஆவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது.