மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதம் இருக்க இங்கிலாந்தைவிட 242 ஓட்டங்கள் பின்னிலையில் இந்தியா

Published By: Vishnu

11 Jul, 2025 | 11:46 PM
image

(நெவில் அன்தனி)

லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூன்றாவது அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல் இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க இங்கிலாந்தைவிட 242 ஓட்டங்களால் இந்தியா பின்னிலையில் இருக்கிறது.

ஆரம்ப வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் கே.எல். ராகுல், கருண் நாயர் ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

கருண் நாயர் 40 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் அணித் தலைவர் ஷுப்மான் கில் 16 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

கருண் நாயரின் பிடியை எடுத்த ஜோ ரூட், 211ஆவது பிடியை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பிடியை எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.

ராகுல் ட்ராவிடின் 210 பிடிகள் என்ற சாதனையையே ஜோ ரூட் முறியடித்தார்.

கே.எல். ராகுல் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 113 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள் உட்பட 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

  முதலாம் நாள் ஆட்டத்தின்போது உபாதைக்குள்ளாகி ஓய்வறைக்கு திரும்பிய ரிஷாப் பான்ட் இன்றைய தினம் களம் தடுப்பில் ஈடுபடவில்லை.

ஆனால், இந்தியாவின் 3ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் துடுப்பெடுத்தாட களம் புகுந்த ரிஷாப் பான்ட் ஆட்டம் இழக்காமல் 19 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ், ஜொவ்ரா ஆச்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர்.

முன்னதாக போட்டியின் இரண்டாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (11) காலை தனது முதலாவது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 251 ஓட்டங்களிலிருந்து  தொடர்ந்து இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 387 ஓட்டங்களைப் பெற்றது.

99 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த முன்னாள் அணித் தலைவர் ஜோ ரூட், இரண்டாம் நாள் காலை முதலாவது பந்திலேயே சதத்தைப் பூர்த்தி செய்தார்.

தனது 156ஆவது டெஸ்ட் போட்டியில் 284ஆவது இன்னிங்ஸில் விளையாடிய ஜோ ரூட் 37ஆவது சதத்தைப் பெற்றார்.

மறுபக்கத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த அணித் லைவர் பென் ஸ்டோக்ஸ் இரண்டாம் நாள் காலை முதலாவதாக ஆட்டம் இழந்தார். அவர் 44 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் 104 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஜோ ரூட் ஆட்டம் இழந்த பின்னர் களம் புகுந்த கிறிஸ் வோக்ஸ்  ஓட்டம் பெறாமலேயே ஆட்டம் இழந்தார். (271 - 7 விக்.)

அதன் பின்னர் ஜெமி ஸ்மித், ப்றைடன் கார்ஸ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் பெற்றதுடன் 8ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஜெமி ஸ்மித் 51 ஓட்டங்களையும் ப்றைடன் கார்ஸ் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்திய பந்துவீச்சாளர்களில் ஜஸ்ப்ரிட் பும்ரா 74 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். 47ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பும்ரா பதிவுசெய்த 15ஆவது 5 விக்கெட் குவியல் இதுவாகும்.

அவரை விட மொஹமத் சிராஜ், நிட்டிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இந்தியாவை துவம்சம்...

2026-08-11 20:03:54
news-image

பரபரப்பான போட்டியில் டிபெண்டர்ஸ் அணியை வீழ்த்தி...

2026-08-11 19:15:25
news-image

அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி;...

2026-08-11 14:12:40
news-image

மேற்கிந்தியத் தீவுகளை உலகக் கிண்ண தகுதிகாணுக்கு...

2026-08-11 12:58:55
news-image

மலேசியாவை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை...

2026-08-11 12:38:36
news-image

பெனல்டியைத் தவறவிட்ட புளூ ஸ்டார் கழகம்,...

2026-08-10 23:29:53
news-image

மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தின் பின்னணியில் இருந்த...

2026-08-10 15:23:49
news-image

புளூ ஸ்டார் - சீ ஹோக்ஸ்...

2026-08-10 12:43:33
news-image

முதலாவது தலைவராக பொறுப்பேற்கிறார் குசல் மெண்டிஸ்...

2026-08-10 12:33:35
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் பதினொருவர் அணியின் விட்டுக்கொடுப்பால்...

2026-08-10 10:47:51
news-image

புளூ ஈக்ள்ஸ் கழகத்துக்கு கடும் சவால்...

2026-08-10 09:03:03
news-image

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் கிண்ணப் பிரிவில்...

2026-08-10 08:59:45