(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரியை 44 சதவீதத்திலிருந்து 30சதவீதமாக குறைந்தமை நல்ல விடயம். என்றாலும், எங்களுடன் ஏற்றுமதி போட்டியாளர்களாக இருந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் பெற்ற வரிச்சலுகை நியாயமானது தானாவெனக் கேட்கிறோம். அத்துடன் வெள்ளைமாளிகையுடன் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு இதனை இன்னும் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையல்,
எமது நாட்டு ஏற்றுமதிகளில் 26.4சதவீத பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. ஆடைத்துறையில் 60வீதம் ஏற்றுமதி தலமாகவும் அமெரிக்கா நாடே இருந்து வருகிறது.
தீர்வை வரியை 44சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைந்தமை நல்லதொரு விடயம். என்றாலும், எங்களுடன் ஏற்றுமதி போட்டியாளர்களாக இருந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் பெற்ற வரிச் சலுகை நியாயமானது தானா என்பது குறித்தும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஜப்பான் 25சதவீதம், மால்டோவா 25சதவீதம், புரூணை 25சதவீதம், தென் கொரியா மற்றும் கஸகஸ்தான் 25சதவீதம், இந்தியா 26சதவீதம் என்ற வகையில் இந்நாடுகள் தமது தீர்வை வரிகளைக் குறைத்துக் கொண்டுள்ளன. நாம் இந்தியா பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
அடுத்த மூன்று வாரங்களுக்குள் நாம் ஆழமான இராஜதந்திர தலையீட்டை மேற்கொண்டே ஆக வேண்டும். நாம் வெள்ளை மாளிகையுடன் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, இந்த வரிச் சலுகைகளை இன்னும் குறைந்த மட்டத்தில் பெற வேண்டும்.
நாட்டிற்கு சிறந்த இணக்கப்பாட்டை பெறுவதற்கு, கட்சி பேதமின்றி ஐக்கிய மக்கள் சக்தி நாங்கள் எமது ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவோம். இந்த வரிகளால் நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகளை இல்லாமலாக்க வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM