மாயக்கூத்து - திரைப்பட விமர்சனம்

Published By: Digital Desk 2

11 Jul, 2025 | 04:11 PM
image

தயாரிப்பு : ராகுல் மூவி மேக்கர்ஸ் & அபிமன்யு கிரியேஷன்ஸ்

நடிகர்கள் : நாகராஜன் கண்ணன்,  டெல்லி கணேஷ், மு. ராமசாமி, காயத்ரி, சாய் தீனா, ஐஸ்வர்யா ரகுபதி மற்றும் பலர்

இயக்கம் : ஏ. ஆர். ராகவேந்திரா

மதிப்பீடு : 3/5

தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் ஆதிக்கம் அதிகம் என்றாலும் இவர்களில் பலரும் வணிக ரீதியிலான வெற்றியை குறிவைத்து தங்களுடைய படைப்பை சமர்ப்பிக்கிறார்கள்.

இந்நிலையில் படைப்பு ரீதியாக எந்த சமரசமும் கொள்ளாமல் ரசிகர்களின் ரசனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் சில புதுமுக படைப்பாளிகள் மட்டும் தான் தங்களது படைப்பை வழங்குகிறார்கள்.

அந்த வகையில் புதுமுக தொழில்நுட்ப கலைஞர்களும், பெரும்பாலான அறிமுக கலைஞர்களும் இணைந்து பணியாற்றி வெளியாகி இருக்கும் திரைப்படம் 'மாயக்கூத்து'. இந்திய மதிப்பில் 25 லட்ச ரூபாய் முதலீட்டில் தயாராகி இருக்கும் இந்த தரமான படைப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவருமா ? கவராதா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தன்னுடைய எழுத்தின் மீது ஆணவமும் படைப்பாளுமையும் கொண்ட எழுத்தாளர் வாசன் ( நாகராஜன் கண்ணன்) - அவர் எழுதிய தொடர்கதையிலிருந்து கதாபாத்திரங்கள் உலவும் மாய உலகில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து அவரால் வெளியே வர முடிந்ததா ?இல்லையா? என்பதை நேர்த்தியாக விவரித்திருக்கும் படம் தான் 'மாயக்கூத்து.

எழுத்தாளர் வாசன் ஒரே தருணத்தில் மூன்று வெவ்வேறு இதழ்களுக்காக தொடர்கதையை எழுதி வருகிறார்.  இதில் ஒரு தொடரில் தனபால் ( சாய் தீனா) எனும் ரவுடி குற்ற சம்பவங்களில் அரை சதம் அடித்து விட்டு ஓய்வு பெற விரும்புகிறார் மற்றொரு தொடர்கதையில் செல்வி ( ஐஸ்வர்யா ரகுபதி) எனும் பணிப்பெண் கதாபாத்திரம் மீது திருட்டுப்பழி விழுகிறது. மற்றொரு தொடர்கதையில் கிராமத்து பெண்ணான ராஜி ( மிருதுளா) மருத்துவராக வேண்டும் என்று கனவு காண்கிறார். இந்த மூன்று கதாபாத்திரத்திற்கும் மூன்று வெவ்வேறு வகையினதான தடைகளை வாசகர்களின் உற்சாகத்திற்காகவும், பரபரப்பிற்காகவும் ஏற்படுத்துகிறார் எழுத்தாளர் வாசன். இதனால் தவிக்கும் அந்த கதாபாத்திரங்கள் தங்களுக்கான நியாயத்தை எழுத்தாளரிடம் கேட்கிறது. அதற்கு எழுத்தாளர் வாசன் எடுத்த முடிவு என்ன? என்பதுதான் இப்படத்தின் திரைக்கதை.

கதாபாத்திர படைப்பு குறித்த உளவியல் சிக்கலை எதிர்கொள்ளும் எழுத்தாளர் வாசன் - அதிலிருந்து தன்னை எப்படி விடுவித்துக் கொள்கிறார் என்பது போன்ற உச்சகட்ட காட்சி நேர்த்தி.

எழுத்தாளர் வாசனாக நடித்திருக்கும் புதுமுக நடிகர் நாகராஜ் கண்ணன் நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார். இவருடைய திரை தோற்றம் பிரபல மலையாள நடிகரை நினைவுபடுத்துவதால் அது ரசிகர்களுக்கு சாதகமான பலனையே அளிக்கிறது.

தனபாலாக நடித்திருக்கும் சாய் தீனா செல்வியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ரகுபதி .. ராஜியாக நடித்திருக்கும் நடிகை மிருதுளா என ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பை அவர்கள் ஏற்று நடத்தி இருக்கும் கதாபாத்திரத்தின் உணர்வை உணர்ந்து நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்கள்.  

அனுபவம் மிக்க நடிப்பினை வழங்கிய டெல்லி கணேஷ் , மு. ராமசாமி, காயத்ரி ஆகியோர்களும் பாராட்டுக்குரியவர்களே.  

குறைந்த முதலீடு என்றாலும்  ஒளிப்பதிவாளர் சுந்தர் ராமகிருஷ்ணன்- படத்தொகுப்பாளர் நாகூரான்- இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன் ஆகிய மூவரும் இயக்குநருக்கு பக்கபலமாக இருந்து இந்த படைப்பை ரசிக்க வைக்கிறார்கள்.

சமூக மாற்றத்திற்காக தங்களது விசாலமான சிந்தனையை பகிர்ந்து கொள்ளும் படைப்பாளிகள் தங்களின் படைப்புகள் மூலம் எப்பொழுதும் சமூக பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்பதனை உரக்க சொல்லியிருப்பதால் இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.

மாயக்கூத்து -‌  தரமான டிஜிற்றல் செல்லுலாயிட் நாவல்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51
news-image

சரத்குமார் 171

2026-07-15 15:04:54
news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34
news-image

கல்லூரி மாணவர்களின் ரீயூனியன் கதையை இயக்கும்...

2026-07-14 15:59:48
news-image

ஞானபீட விருதை பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து

2026-07-14 15:58:27
news-image

டொக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'வெல்கம்...

2026-07-14 15:37:24
news-image

நடிகர் பகத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-07-13 17:15:25
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-07-13 16:38:42
news-image

ஆங்கிலோ- இந்திய சமூக மக்களின் வாழ்வியலை...

2026-07-13 16:35:45