இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் அண்டனி கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'சக்தி திருமகன்' படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சக்தி திருமகன்' படத்தில் விஜய் அண்டனி, வாகை சந்திரசேகர், செல் முருகன், ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். அரசியலை மையப்படுத்தி கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி பிலிம் கொர்ப்பரேசன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் நிறைவடைந்திருப்பதால்.. இதன் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.
இதனிடையே விஜய் அண்டனி நடிப்பில் வெளியான 'மார்கன் 'திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது என்பதும், விஜய் அண்டனி தயாரித்து நடித்திருக்கிறார் என்பதும், அரசியல் பின்னணி கொண்ட படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM