இயக்குநரும், நடிகருமான கிஷோர் ராஜ்குமார் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
'நாய் சேகர்' படத்தை இயக்கிய இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கிஷோர் ராஜ்குமார் - 'கொட்டு காளி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மலையாள நடிகை அன்னா பென் ஆகியோர் கதையின் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்கள். பிரவீண் பாலு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ராம் மோகன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை நாய்ஸ் & கிரைய்ன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' காதலும், நகைச்சுவையும் கலந்து , ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது. திருமணமான தம்பதிகளுக்கு இடையே ஜோடி பொருத்தம் குறித்து கலகலப்பான காட்சிகளுடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
ஏராளமான தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த கிஷோர் ராஜ்குமார் கதையின் நாயகனாக இப்படத்தில் அறிமுகம் ஆவதாலும், மலையாள நடிகை அன்னா பென் கதையின் நாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாலும் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில் ரசிகர்களிடத்தில் ஓரளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM