323 கொள்கலன்களில் பிரபாகரனின் ஆயுதங்கள் என பாராளுமன்றில் தெரிவித்தவர்கள் விசாரணையில் வாக்கு மூலமளிக்கத் தயங்குவது ஏன் ? - அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி

11 Jul, 2025 | 04:15 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாக பாராளுமன்ற  சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு குறிப்பிட்டார்கள். இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும். ஒன்று பொய்யுரைத்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விசாரணைகளுக்கு செல்லுங்கள்.பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்து கொண்டு ஏதும் குறிப்பிட முடியாது, பொய்யுரைக்கவும் முடியாதென சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற அமர்வின் போது  பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்துக்குள்ளும், பேச்சுரிமையை  பயன்படுத்திக் கொண்டு வெளியிலும்  பொய்யுரைக்கிறார்கள்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்  என்று குறிப்பிட்டார்கள்.அது குறித்து எவ்வாறு விசாரிக்காமல் இருக்க முடியும்.விசாரணைகளுக்கு செல்ல இவர்கள் ஏன் அச்சமடைகிறார்கள். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு ஏதும் கூற முடியுமா, பொய்யுரைக்க முடியுமா,

323 கொள்கலன்கள் விடுவிப்புக்கு நான் அனுமதி வழங்கியதாக குறிப்பிடும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறேன்.கடந்த ஜனவரி மாத காலப்பகுதியில் இந்த கொள்கலன்கள் மேல் மாகாண ஆளுநருடையது என்று அனைவரும் குறிப்பிட்டார்கள். 

பாராளுமன்றத்தில் அதை குறிப்பிட்டு கூச்சலிட்டார்கள். இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக ஆளுநர் நடவடிக்கை எடுத்ததன் பின்னர் தற்போது அவ்வாறு குறிப்பிடவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

ஐந்து மாதங்களுக்கு பின்னர் இந்த கொள்கலன்களை நான் விடுவித்ததாக குறிப்பிட்டார்கள். நான் விடுவித்திருந்தால் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள், வழக்குத் தாக்கல் செய்யுங்கள்.

அரச நிதியை மோசடி செய்து நாங்கள் அரசியலுக்கு வரவில்லை.இந்த பாரதூரமான குற்றச்சாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

கொள்கலன்களை விடுவிக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது, அமைச்சர் என்ற வகையில் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் நான் பயன்படுத்துவதில்லை. 

பரிசோதனைகளின்றி கொள்கலன்களை விடுவிப்பதற்கு  எனக்கு எவ்வித அவசியமும் கிடையாது.பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு பொய்யுரைத்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாக பாராளுமன்ற  சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு குறிப்பிட்டார்கள்.இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும்.

பொய்யுரைத்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விசாரணைகளுக்கு செல்லுங்கள். கீழ்த்தரமான செயற்பாடு தற்போது வெளிப்பட்டவுடன் என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பது அரசாங்கத்தின் வெற்றியல்ல...

2026-07-20 12:24:27
news-image

மர்மமான உயிரிழப்புக்கக்களை தற்கொலை என்று அடையாளப்படுத்த...

2026-07-20 14:27:32
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்திற்கு விழும்...

2026-07-20 14:28:29
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பது தொடர்பில்...

2026-07-20 20:19:51
news-image

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு சிகிச்சை; கடத்தல்காரர்களுக்கு கடும்...

2026-07-20 14:51:24
news-image

அனில் ஜயந்த பெர்னாண்டோ பெயரில் பரவும்...

2026-07-20 15:13:37
news-image

நெல்லுக்கு அதிக விலையால் நுகர்வோரே அதிகம்...

2026-07-20 15:33:04
news-image

நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புமாறு ஜனாதிபதியிடம்...

2026-07-20 15:51:34
news-image

இலங்கையானது ஒரு குற்றவியல் அரசாகவே செயற்பட்டு...

2026-07-20 17:37:04
news-image

ஒருசில விடயங்களை பகிரங்கப்படுத்தப் போவதில்லை -...

2026-07-20 20:18:52
news-image

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வை நேரில்...

2026-07-20 17:39:03
news-image

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை 33% ஆக...

2026-07-20 17:39:44