35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்

11 Jul, 2025 | 01:16 PM
image

மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய தேர் திருவிழா 35 ஆண்டுகளின் பின்னர் புதன்கிழமை (09) நடைபெற்றது.

கண்ணகி அம்மன் ஆலய வருடாந்திர அலங்கார உற்சவம் கடந்த 26ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து உற்சவங்கள் நடைபெற்று 14ஆம் நாளா நேற்றுமுன்தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது 

கடந்த 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மயிலிட்டி பகுதி மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டது.

அக் கால பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருந்து ஆலயம் சேதமடைந்ததுடன், ஆலயத்தின் சித்திர தேரும் முற்றாக அழிக்கப்பட்டது.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் பல்வேறு மக்கள் போராட்டங்களை தொடர்ந்து மயிலிட்டி பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆலயத்தை மக்கள் தமது நிதி பங்களிப்பில் புனரமைத்தனர்.

அதனை அடுத்து, மக்களின் நிதி பங்களிப்பில் ஆலயத்திற்காக சித்திர தேர் உருவாக்கப்பட்டு, கடந்த 07ஆம் திகதி சித்திர தேர் வெள்ளோட்டம் இடம்பெற்று, நேற்றுமுன்தினம் புதன்கிழமை கண்ணகி அம்பாள் புதிய சித்திர தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50
news-image

லயன்ஸ் இன்டர்நெஷனல் 306D5 மாவட்ட விளையாட்டுக்...

2026-08-10 15:54:26
news-image

கொழும்பு காக்கைதீவில் ஆடி அமாவாசை பிதிர்...

2026-08-10 15:33:28
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-08-10 12:29:13
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி பழைய மாணவர்...

2026-08-10 12:26:11
news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39