உலக சரக்கு விமான விருதுகள் -2025 விழாவில் “ஆசியாவின் சிறந்த விமான நிறுவனம்” என்ற விருதுக்கான இறுதிப்போட்டிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சரக்குப் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய சரக்கு விமானத் துறையின் சிறந்த சேவை தரத்தை மதிப்பிடும் இந்த விருதுகள், சர்வதேச சுயாதீன மத்தியஸ்தர்களின் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, தொழில் நுட்ப வாக்கெடுப்பின் மூலம் இறுதிப்போட்டிக்கான முடிவு தீர்மானிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சரக்குப் பிரிவு தொடர்ந்து முன்னேற்றங்களை அடைந்து, ஆசியாவின் முன்னணி சரக்கு விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக தன்னை நிரூபித்து வருகின்றமை இந்த விருதுக்கான தெரிவு உறுதிப்படுத்துகிறது.
இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் சரக்கு விமானப் பிரிவுத் தலைவரான சமிந்த பெரேரா கருத்து தெரிவிக்கையில்,
“இது எங்களுடைய பெருமையான சாதனை. எங்கள் சேவை தரத்தையும் தொழில் நுணுக்கத் தலைவர்களிடமிருந்து பெற்ற நம்பிக்கையையும் இது உறுதிப்படுத்துகிறது.நம்பகமான சேவைகளை வழங்குவதே எங்கள் நோக்கம். உலகின் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையேயான சிறந்த சேவையாக நாம் தொடர்வோம்” என்றார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சரக்குப் பிரிவு 93 வீதம் உறுதியான சரக்கு ஏற்றுமதி விகிதத்துடன், குறைந்த நேரத்தில் (40 நிமிடங்கள் வரை) சரக்கு மாற்றங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. இணையதள முன்பதிவு வசதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளுடன் விரைவான விநியோக சேவையை வழங்கி வருகிறது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளில் தனித்துவமான பங்கு வகிக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சரக்குப் பிரிவு , பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை கடைப்பிடிக்க முழு கவனம் செலுத்துகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM