குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின் அடையாளம் அல்ல குற்ற உணர்வின் அடையாளம் - அமெரிக்காவின் தடை குறித்து ஐநா அறிக்கையாளர்

Published By: Rajeeban

11 Jul, 2025 | 12:35 PM
image

குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின் அடையாளம் அல்ல குற்ற உணர்வின் அடையாளம் என இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்தமைக்காக அமெரிக்காவின் தடையை எதிர்நோக்கியுள்ள ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகபதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் நாங்கள் ஒன்றாக நிமிர்ந்துநிற்போம் என தெரிவித்துள்ள அவர் காசா எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைவரினது கண்களும் தொடர்ந்தும் பிள்ளைகள் பட்டினி காரணமாக தாய்மாரின் கரங்களில் உயிரிழக்கும் - உணவு தேடும் போது அவர்களின் தந்தைமாரும் சகோதரர்களும் குண்டுவீச்சில் துண்டுதுண்டாக்கப்படும் காசா மீது இருக்கவேண்டும்,என வேண்டுகோள் விடுத்துள்ள பிரான்செஸ்கா மிடில் ஈஸ்ட் ஐயின் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கையில் நான் யாரையோ பதற்றமடையச்செய்திருக்கின்றேன் போல தோன்றுகின்றது,நான் இங்கு பேசிக்கொண்டிருக்கும்போது காசாவில் மக்கள் மரணித்துக்கொண்டிருக்கின்றார்கள் ஐக்கிய நாடுகளால் அதனை நிறுத்த முடியாமல் உள்ளது என்பதே எனது கரிசனை என குறிப்பிட்டுள்ளார்.

காசாமீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கியநாடுகள் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்கர்கள் இஸ்ரேலியர்களிற்கு எதிராக ஐசிசி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் செயற்பட்டமைக்காக பிரான்செஸ்காவிற்கு எதிராக தடைகளை விதிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ  ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஐநா அறிக்கையாளராக செயற்படுவதற்கு பிரான்செஸ்கா பொருத்தமற்றவர் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்

ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்திருந்தார்.சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் அதனை பலவீனப்படுத்தும்அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ் கிரேக்க இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் இரு...

2026-07-11 10:46:46
news-image

பிலிப்பைன்ஸில் மண்சரிவுகளில் சிக்கி 15 பேர்...

2026-07-11 09:55:09
news-image

எனக்கு எனது ஜனம்தான் முக்கியம் -...

2026-07-10 18:24:13
news-image

மீள்பயன்பாட்டு ரொக்கெட் தொழில்நுட்பத்தில் சீனா வரலாற்று...

2026-07-10 16:48:53
news-image

ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் புதிய...

2026-07-10 13:05:16
news-image

ஸ்பெயினில் காட்டுத்தீ: 12 பேர் உயிரிழப்பு,...

2026-07-10 10:32:12
news-image

சீனாவில் காலணித் தொழிற்சாலையில் பெரும் தீ...

2026-07-10 09:20:36
news-image

ஐரோப்பாவை உலுக்கும் வெப்பம்: ஜேர்மனியில் மாத்திரம்...

2026-07-09 16:22:55
news-image

ராஜஸ்தானில் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட...

2026-07-09 15:11:53
news-image

ஈரானின் சபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா...

2026-07-09 13:48:56
news-image

அமெரிக்காவுக்குள் பரவி வரும் கம்யூனிஸமே நாட்டின்...

2026-07-09 13:48:17
news-image

மணிக்கு 200 கி.மீ வேகத்தில் வீசும்...

2026-07-09 11:03:47