இங்கிலாந்து 251 - 4 விக்., ஜோ ரூட் 99 ஆ.இ.

Published By: Vishnu

11 Jul, 2025 | 05:24 AM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் கிரிக்கெட்டின் தாயகமான லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (10) ஆரம்பமான அண்டர்சன் - டெண்டுல்கர் 3ஆவது டெஸ்ட்  கிரிக்கெட்   போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஜோ ரூட் 99 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் 39 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் உள்ள பாரம்பரிய மணியை ஒலிக்கச் செய்து மூன்றவாது டெஸ்ட் போட்டியை சச்சின் டெண்டுல்கர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முன்னிலை அடைவதை குறிக்கோளாகக் கொண்டு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும் இந்தியாவும் விளையாடுகின்றன.

ஹெடிங்லேயில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நன்கு திட்டமிட்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 5 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

தொடர்ந்து எஜ்பெஸ்டனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணித் தலைவர் ஷுப்மான் கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் குவித்த முறையே இரட்டைச் சதம், சதம் ஆகியவற்றின் உதவியுடன் இந்தியா 326 ஓட்டங்களால் அமோக வெற்றிபெற்றிருந்தது.

இதனை அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1 - 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.

  இந் நிலையில் தொடரில் முன்னிலை அடைவதை குறிகோளாகக் கொண்டு 3ஆவது டெஸ்ட் போட்டியை இரண்டு அணிகளும் எதிர்கொள்கின்றன.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்துக்கு ஸக் குரோவ்லி, பென் டக்கெட் ஆகிய இருவரும் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், இருவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

பென் டக்கெட் 23 ஓட்டங்களையும் ஸக் குரோவ்லி 18 ஓட்டங்களையும் பெற்றனர். (44 - 2  விக்.)

தொடர்ந்து ஒல்லி போப், முன்னாள் அணித் தலைவர் ஜோ ரூட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 109 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ஒல்லி போப் 44 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து ஹெரி ப்றூக் 11 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 250 ஓட்டங்களாக உயர்த்தினர்.

பந்துவீச்சில் நிட்டிஷ் குமார் ரெட்டி 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 35 ஓட்டங்ளுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் லீக் முதல் சுற்றை ஆறுதல்...

2026-09-10 20:41:01
news-image

இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இரண்டு பயிற்சிப்...

2026-09-10 19:35:15
news-image

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்...

2026-09-10 17:35:42
news-image

ஹர்மன்பிரீத் கவுர் தலைகீழாக பாய்ந்து பிடித்த...

2026-09-10 17:05:27
news-image

20ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு தயாராகும்...

2026-09-10 16:31:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும்...

2026-09-10 13:58:38
news-image

ஏஸ் கெப்பிட்டல் சிசி அணியை 64...

2026-09-10 02:04:13
news-image

பொலிஸ் கழகத்தின் கடும் சவாலை முறியடித்து...

2026-09-10 01:58:39
news-image

முவர்ஸ் அணியுடனான கால் இறுதியில் 2...

2026-09-09 22:14:27
news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19