கடல்மார்க்கமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் : தனுஷ்கோடி மணல் திட்டிலிருந்து மீட்ட இந்திய கடலோர காவல்படை

Published By: Vishnu

10 Jul, 2025 | 10:00 PM
image

இந்தியாவின், தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் தவித்த தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கைத் தமிழர் ஒருவரை இந்திய கடலோர காவல் படையினர் வியாழக்கிழமை (10) மீட்டு மரைன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் மூன்றாம் மணல் திட்டில் இலங்கை தமிழர் ஒருவர் நிற்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து இந்திய கடலோர காவல் படை முகாமுக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து  கப்பலில் தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டிற்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர் அங்கு மீனவர்கள் கொடுத்த தகவலுக்கு அமைய நின்று கொண்டிருந்த இலங்கை தமிழரை பத்திரமாக மீட்டு தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து இலங்கை தமிழரை ராமேஸ்வரம் மரைன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

ஒப்படைக்கப்பட்ட இலங்கை தமிழரை மண்டபம் மரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மட்டக்களப்பு மாவட்டம்  ஏறாவூர்  குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கியோசன் (28) என தெரியவந்தது.

கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற கியோசனின் பெற்றோர். வேலூர் அணைக்கட்டு முகாமில் தங்கியிருந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு கியோசன்  தமிழகத்தில் பிறந்துள்ளார்.

பின்னர் 2012 ஆம் ஆண்டு  கியோசன் அக்காவின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் இலங்கை சென்று மீண்டும் தமிழகம் வந்து தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மட்டக்களப்பில் தனது அப்பாவுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்வதற்காக விமானம் மூலம் இலங்கை சென்றுள்ளார் கியோசன்.

நிலங்களை விற்று விட்டு மீண்டும் விமானம் மூலம் தமிழகத்திற்கு திரும்பி வர  விசா கிடைக்காததால் கியோசன் சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகம் வருவதற்காக புதன்கிழமை (9) இரவு மன்னார் கடற்கரையில் இருந்து ரூ.50 ஆயிரம் கொடுத்து படகொன்றில் புறப்பட்டு  நள்ளிரவு தனுஷ்கோடி மூன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளமை தெரிய வந்துள்ளது

மத்திய, மாநில உளவுத்துறையினர் கியோசனை விசாரணை நடத்திய பின்னர் கியோசன்  மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தாமல் பொருளாதார முன்னேற்றம்...

2026-07-18 05:41:32
news-image

எரிபொருள் விநியோக பாதுகாப்பை உறுதிப்படுத்த கோட்டா...

2026-07-18 05:33:11
news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04