இலங்கைக்கு வெற்றி இலக்கு 155 ஓட்டங்கள்

Published By: Vishnu

10 Jul, 2025 | 08:43 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில்  இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றுவரும் முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு 155 ஓட்டங்களை வெற்றி இலக்காக பங்களாதேஷ் நிர்ணயித்துள்ளது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 154

ஓட்டங்களைப் பெற்றது.

முதல் 15 ஓவர்களில் 108 ஓட்டங்களைப் பெற்றிருந்த பங்களாதேஷ் கடைசி 5 ஓவர்களில் 46 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் 38 ஓட்டங்களையும் மொஹம்மத் நய்ம் ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களையும் மெஹிதி ஹசன் மிராஸ் 29 ஓட்டங்களையும்  ஷமிம் ஹொசெய்ன் ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும்பெற்றனர்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அணிக்கு ஒரு வருடத்திற்கு பின்னர் மீள அழைக்கப்பட்ட தசுன் ஷானக்க 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஜெவ்றி வெண்டசே 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நுவன் துஷார 32 ஓட்டங்களுக்கு ஒரு  விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51
news-image

ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor...

2026-08-05 17:51:06
news-image

பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்ற ரொமேஷ்...

2026-08-05 12:32:55
news-image

கடைசி மகளிர் ரி20இல் பாகிஸ்தானின் சுழற்சியில்...

2026-08-04 23:54:46
news-image

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியினர் இலங்கை...

2026-08-04 23:18:26
news-image

சீ ஹோக்ஸ் உடனான பரபரப்பான போட்டியில்...

2026-08-04 20:00:25
news-image

கலம்போ எவ். சி. அணியிடம் வீழ்ந்த...

2026-08-04 09:29:41
news-image

கிளாஸ்கோவில் கோலூன்றிப் பாய்தலில் சாதிப்பாரா தேசிய...

2026-08-01 13:45:34