முக்கிய 3 விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் கோரிக்கைகளை முன்வைத்த ரவிகரன் எம்.பி

10 Jul, 2025 | 10:08 AM
image

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்ஜிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று புதன்கிழமை (09) நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.

குறித்த அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அமைச்சரிடம் இவ்வாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

குறிப்பாக முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்தல், வன்னிப் பிராந்தியத்தில் காணப்படும் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் தமிழ்பேசும் பெண்பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையாவது நியமித்தல், வன்னியிலுள்ள பிரதேசசெயலகங்களில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திக்குழுக்களைச் செயற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளே நடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால், அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.

மேலும் குறித்த அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் குழு உறுப்பினர்கள், பாராளுமன்ற அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35
news-image

சமூக ஊடகங்கள் மூலம் சிறைச்சாலை அநீதியை...

2026-08-09 14:34:30
news-image

சிறைச்சாலைகளில் கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக...

2026-08-09 14:57:24
news-image

சிறை மோதலுக்கு எதிர்க்கட்சிகளை குறை கூறுவது...

2026-08-09 15:25:39
news-image

ஜே.ஆரின் அரசியலமைப்புக்கு அரசாங்கம் மேலும் வலு...

2026-08-09 14:48:04