உணவுக்கலைஞர்களின் விருப்பு, துல்லியம் மற்றும் புதுமைகளை போற்றும் வகையில், இம்முறை 7 ஆவது ஆண்டாக Bocuse d’Or Sri Lanka 2025 என்ற சமையல் கலைப்போட்டி இடம்பெறவுள்ளது.
Bocuse d’Or Sri Lanka 2025 என்ற சமையல் கலை போட்டி, டில்மா சீலோன் டீ மற்றும் பல நிறுவனங்களின் அனுசரணையில் நடைபெறவுள்ளது.
மிகச் சிறந்த சமையல் கலை போட்டிகளில் ஒன்றாக காணப்படும் Bocuse d’Or Sri Lanka 2025 க்கான தேசிய ரீதியிலான தெரிவு, ஜூலை 27 ஆம் திகதியன்று மாலபேயில் அமைந்துள்ள William Angliss Institute இல் நடைபெறவுள்ளதுடன் அதனுடன் இணைந்து கொழும்பில் அமைந்துள்ள Cinnamon Life இல் விருது வழங்கும் விழாவும் இரவு விருந்துபசாரமும் இடம்பெறவுள்ளது.
இப் போட்டியில் தெரிவாகும் இலங்கையின் மிகச் சிறந்த சமையல் நிபுணர்கள் Bocuse d’Or Asia 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டு பிரான்ஸின் லியோனில் நடைபெறும் உலக இறுதிப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளனர்.

இம் முறை இப்போட்டியில் இலங்கையில் உள்ள 24 ஹோட்டல்களின் சமையல் நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு ஜூலை மாதம் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஹில்டன் ரெசிடன்ஸில் இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய டில்மா டீ யின் தலைவர் டில்ஹான் சி. பெர்னாண்டோ,
“இது இலங்கையின் சமையல் பயணத்தில் முக்கியமான கட்டமாகும். Bocuse d’Or போட்டி என்பது சாதாரண உணவுப் போட்டியல்ல, இது இலங்கையின் புத்திசாலித்தனத்தையும் கலைத்திறனையும் எடுத்தியம்பும் நிகழ்வாகும். இவ்வாண்டு 40 வருட நிறைவை டில்மா டீ கொண்டாடும் தருணத்தில், இலங்கையில் Bocuse d’Or இற்கு அனுசரணை வழங்குவதையிட்டு பெருமைப்படுகின்றது. ” என்றார்.

இதன் போது உரையாற்றிய Bocuse d’Or Sri Lanka இன் தலைவரான சமையல் நிபுணர் ரொஹான் பெர்னாண்டோபுள்ளே,
“எங்கள் சமையல் கலைஞர்கள் உலக அரங்கில் வெற்றி பெற தயாராக இருக்கின்றனர். இந்த போட்டி அவர்களது திறமை, அடையாளம் மற்றும் நுணுக்கத்தைக் வெளிக்காட்டும் அரிய வாய்ப்பாகும். நாம் இளம் சமையல் நிபுணர்களை உருவாக்குவதில் ஆர்வமாகவுள்ளோம். இம்முறை பல இளம் சமையல் நிபுணர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்கின்றனர். ” என்றார்.

இந்நிகழ்வில், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்டும் கலந்துகொண்டார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Bocuse d’Or Sri Lanka ஆனது. தற்போது, சமையல் நிபுணர்களுக்கான திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு களமாக மாறியுள்ளது. இம்முறை இந்தப் போட்டி 7 ஆவது தடவையாக இடம்பெறுகின்றது. பாரம்பரியம், கலை, மற்றும் நவீனத்துவங்கள் ஒன்றையொன்று இங்கு சந்திக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டியில், இம்முறை இடம்பெறும் Bocuse d’Or Sri Lanka 2025, இலங்கையின் சமையல் அடையாளத்தை உலக தரத்தில் கொண்டாடும் விழாவாக அமைக்கப் பெறுகிறது.
இந்த போட்டியை உலகளாவிய மற்றும் உள்ளூர் சமையல் நிபுணர்கள் கொண்ட விசேட மத்தியஸ்தர்கள் குழு மதிப்பீடு செய்யவுள்ளது.
அதன் படி சர்வதேச மத்தியஸ்தர்கள் குழுவில், ஜேர்மனியைச் சேர்ந்த சமையல் நிபுணர் டேனியல் ஷேடே, ஜேர்மனியைச் சேர்ந்த சமையல் நிபுணர் பிராங்க் விட்மான், ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த சமையல் நிபுணர் அலன் ஓரியல், பெல்ஜியத்தைச் சேர்ந்த சமையல் நிபுணர் மைக்கேல் சலென் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இலங்கையின் மத்தியஸ்தர்கள் குழுவில், அனுபவமிக்க சமையல் நிபுணரான வசந்த பீரிஸ், சமையல் நிபுணர் ரிஷாடீன், சமையல் நிபுணர் சமன் விஜேரத்ன, சமையல் நிபுணர் ஜனக சம்பத் வீரகோன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

Bocuse d’Or Sri Lanka 2025 போட்டி நிகழ்வை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல முக்கிய அனுசரணையாளராக டில்மா டீ யும், டைமண்ட் அனுசரணையாளராக நெஸ்லேயும் பிளட்டினம் அனுசரணையாளராக யுனிலிவரும் பங்களிப்புகளை வழங்குகின்றன.
அத்துடன், SLHGA, SLTDA, SriLankan Airlines, Mulwarra, Tea Trails, Luxury Brands, Red FM, Director.lk, CDC Events, Singer, East-West Marketing, Round Island, Maliban, William Angliss Institute, Cinnamon Grand, Cinnamon Resorts, GSO, Asriel, Nelna Farm, Nelna Agri, Connaissance de Ceylon, Thema Collection, Hilton Residence, Rockland, Pyramid Wilmar, Prima மற்றும் Cinnamon Life ஆகியனவும் இதற்கு அனுசரணை வழங்குகின்றன.
இலங்கையின் ஆற்றல், விருந்தோம்பல் மற்றும் புதுமையை உலகத்திற்கு எடுத்துச்செல்லும் ஒருங்கிணைந்த கனவை நனவாக்கும் முகமாக Bocuse d’Or Sri Lanka 2025 என்ற சமையல் போட்டி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார்














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM