சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் தரவரிசையில் இலங்கையர்கள் முன்னேற்றம்

09 Jul, 2025 | 08:27 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகக்கான துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சுகளுக்கான தரவரிசையில் இலங்கையர்கள் முன்னேறி உள்ளனர்.

பங்களாதேஷுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

அத் தொடரில் சரித் அசலன்க இரண்டு அரைச் சதங்கள் குவித்ததைத் தொடர்ந்து  தரிவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 6ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

அத் ஒரு சதம். ஓர் அரைச் சதத்துடன் மொத்தமாக 225 ஒட்டங்களைப் பெற்று தொடர் வெற்றியில் பெரும் பங்காற்றிய குசல் மெண்டிஸ் 20ஆவது இடத்திலிருந்து 10 ஆவது இடத்திற்கு தாவியுள்ளார்.

இதேவேளை, இந்தத் தொடரில் பிரகாசிக்கத் தவறிய பெத்தம் நிஸ்ஸன்க 6 இடங்கள் பின்தள்ளப்பட்டு 20ஆம் இடத்தில் உள்ளார்.

பங்களாதேஷுடனான ஒருநாள் தொடரில் மஹீஷ் தீக்ஷன பிரகாசிக்காதபோதிலும் அவர் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கிறார்.

அத் தொடரில் 9 விக்கெட்களைக் கைப்பற்றிய வனிந்து ஹசரங்க, 11 இடங்கள் முன்னேறி 8ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

துனித் வெல்லாலகே 5 இடங்கள் முன்னேறி 31ஆம் இடத்தை அடைந்துள்ளார்.

தொடரில் 8 விக்கெட்களைக் கைப்பற்றிய அசித்த பெர்னாண்டோ 23 இடங்கள் முன்னேறி 36ஆவது இடத்தை இந்தியாவின் அக்சார் பட்டேலுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சர்வதேச ரி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசைகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44