(நெவில் அன்தனி)
இந்தியாவுக்கான பங்களாதேஷ் கிரிக்கெட் சுற்றுப் பயணம் ஓத்திவைக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட தொடர்களை நடத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராயப்பட்டுவருவதாக அறியக் கிடைக்கிறது.
இலங்கையில் ஜூலை அல்லது ஆகஸ்டில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த லங்கா பிறிமியர் லீக் பிற்போடப்பட்டுள்ளதால் இரண்டு அணிகளும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கான ஓர் அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக எதுவும் உறுதிசெய்யப்படாத போதிலும் இரண்டு நாடுகளினதும் கிரிக்கெட் சபைகள் இருதரப்பு தொடரை நடத்தவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்துவருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படி தொடர்கள் நடத்தப்படுவதாக இருந்தால் இரண்டு அணிகளுக்கும் இடையில் 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் 3 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடம் இந்திய அணியினர் இலங்கை வருவதாக இருக்கவில்லை. ஆனால் பங்ளாதேஷ் அணியினரின் இந்தியாவுக்கான சுற்றுப் பயணம் பிற்போடப்பட்டுள்ளதால் இந்திய அணியினர் இலங்கை வருகை தருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, ஸிம்பாப்வேக்கான கிரிக்கெட் விஜயத்தை இலங்கை எதிர்வரும் ஆகஸ்ட் 29ஆம் ஆரம்பிக்கவுள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் மாத்திரமே இந்தியாவுடனான இரண்டு வகை கிரிக்கெட் தொடர்களை நடத்துவதற்கான பொருத்தமான கால ப்பகுதியாக அமையும் என கருதப்படுகிறது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 3 - 0 என இந்தியா வெற்றிகொண்டிருந்தது. அதில் கடைசிப் போட்டி சம நிலையில் முடிவடைந்ததுடன் சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றிபெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 - 0 என இலங்கை கைப்பற்றியது.
அத் தொடரில் முதலாவது போட்டி சம நிலையில் முடிவடைந்தபோதிலும் மத்தியஸ்தர்கள் சுப்பர் ஓவரை அமுல்படுத்தாதது பலத்த கேள்வியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM