கொழும்பு புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தால் தொடர்ந்து 14வது வருடமாகவும் தரம் 5 மாணவர்களுக்கான இலவசமாக விநியோகிக்கப்படும் முன்னோடி பரீட்சை வினாத்தாள்கள் இம்முறையும் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது
பதினைந்து இலட்சம் ரூபா செலவில் அச்சிடப்பட்ட முன்னோடி பரீட்சை வினாத்தாள்களைக் கையளிக்கும் நிகழ்வு நாளை (10) காலை 10 மணிக்கு கொழும்பு முகத்துவாரம் இந்து கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மன்றத்தின் தலைவர் எஸ். சுரேஷ்குமார் தலைமையில் மன்ற போசகர்களால் வழங்கிவைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முகத்துவாரம் இந்து கல்லூரியின் அதிபர் எஸ். ரஜீவன் கலந்துகொள்கிறார்.
கடிதங்களை அனுப்பிய கொழும்பு மற்றும் வத்தளை பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் தவறாது கலந்துகொண்டு அன்றைய தினம் தங்களுக்குரிய வினாத்தாள்களை கட்டாயமாக பெற்றுக்கொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நிகழ்வுக்கு வருகை தரமுடியாதவர்கள், தங்கள் சார்பாக வேறு ஒருவரை அனுப்பியும் வினாத்தாள்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களைப் பெற 0755006600 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளலாம்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM