புதுமுக நடிகர் தினேஷ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' யாதும் அறியான்' எனும் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் எம். கோபி இயக்கத்தில் உருவாகி வரும் 'யாதும் அறியான்' எனும் திரைப்படத்தில் தினேஷ், அப்புக்குட்டி , தம்பி ராமையா, பிரானா, ஆனந்த் பாண்டி, ஆனந்தராஜ், ராஜா குமாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். எல் டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தர்மா பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நிலையில் இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் ' 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தில் இனி இலவசம் கிடையாது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு புது திட்டம் : முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு' என்ற போஸ்டரை இடம்பெறச் செய்துள்ளனர். இது சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் முன்னோட்டத்தில் இடம்பெறும் காட்சிகள் ஹாரர் திரில்லர் ஜேனரை நினைவூட்டுவதால் ரசிகர்களை கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM