மட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கதவு திறத்தலுடன் பால்குட பவனியும் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்றுத் தொன்மை மிக்க மட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித் தெரு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கானது தமிழர்களின் பாரம்பரியங்களைக் கொண்டதாக நடைபெற்று வருகிறது.
நேற்று (8) மாலை மட்டக்களப்பு நகரில் உள்ள வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பூரணகும்பம் மற்றும் பூசைப்பெட்டிகளுடன் பெருமளவான பக்தர்கள் பால்குடம் ஏந்திவர பவனியாக ஆலயத்தினை வந்தடைந்தது.
ஆலயத்திற்கு பால்குட பவனி வந்து சேர்ந்ததும் ஆலயத்தின் திருச்சடங்கிற்கான கதவு திறக்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் அம்பாளுக்கு பாலாபிஷேகமும் நடைபெற்றது.
வருடாந்த திருச்சடங்கில் ஏழாம் நாள் சடங்காக கல்யாணக்கால் சடங்கும், ஒன்பதாம் நாள் சடங்காக கும்பச்சடங்கும் நடைபெற்று 10ஆம் நாள் சடங்காக தவநிலை சடங்கும் நடைபெற்று மறுநாள் தீமிதிப்பு சடங்கும் நடைபெறும்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM