தணிக்கை பெறுவதில் ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்து நீதிமன்றத்தின் உதவியை நாடி மறு தணிக்கை செய்யப்பட்ட வெற்றிமாறனின் தயாரிப்பில் உருவான ' பேட் கேர்ள் ' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட் கேர்ள்' எனும் திரைப்படத்தில் அஞ்சலி சிவராமன் , சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹிர்து ஹாரூன், டிஜே அருணாச்சலம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரீத்தா ஜெயராமன் - ஜெகதீஷ் ரவி- பிரின்ஸ் ஆண்டர்சன் - ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்திருக்கிறார்.
வளரிளம் பருவத்து பெண்ணின் எதிர்பாலின கவர்ச்சியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கிராஸ் ரூட் பிலிம் கம்பனி நிறுவனம் சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்துவதாக கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதனால் இதற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழு விளக்கம் அளித்த பிறகு இதற்கான தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
தற்போது இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதே திகதியில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'மதராசி ' திரைப்படம் வெளியாகிறது என்பதும் , பெரிய பட்ஜட்டிலான இந்த படத்துடன் சின்ன பட்ஜட்டில் உருவாக்கப்பட்ட 'பேட் கேர்ள்' மோதுகிறது. இதனால் திரையுலக வணிக தரப்பு பெரும் எதிர்பார்ப்பிற்கு ஆளாகி இருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM