இசையமைப்பாளருக்கு கைகடிகாரத்தை பரிசளித்த சரத்குமார்

09 Jul, 2025 | 06:09 PM
image

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார் -தேவயானி -சித்தார்த் -மீதா ரகுநாத் -சைத்ரா - ஆகியோர் நடிப்பில் படமாளிகையில் வெளியான' 3 பி ஹெச் கே' எனும் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வணிக ரீதியாகவும்,  விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்று வருகிறது. இதன் காரணமாக படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் பேசிய சரத்குமார், '' படத்தை பார்த்த சினிமா விமர்சகர்களும் , ஊடகத்தினரும் வெளிப்படுத்திய நேர் நிலையான விமர்சனம் - ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, திரையரங்கத்திற்கு வரவழைத்து, இப்படத்தை வெற்றி பெறச் செய்தது. இதற்காக ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற குடும்பப் பாங்கான திரைப்படங்களை தயாரிப்பதற்கு துணிச்சல் வேண்டும்.‌ இதற்காக இந்த கதையை தெரிவு செய்து தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படம் வெளியான பிறகு தமிழக முழுவதும் ஏராளமான திரையரங்குகளுக்கு ரசிகர்களின் வரவேற்பை காணச் சென்றோம்.  மக்கள் தங்கள் உணர்வை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினர்.

இந்த படத்திற்கு ஜீவனாக திகழ்ந்தது இசை தான். அவரை மனதார பாராட்டுகிறேன். அவர் விரும்பிய படி என் கை கடிகாரத்தை அவருக்கு பரிசாக அளிக்கிறேன்''  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனோவிஷன் நிறுவனத் தயாரிப்பிலான 'வித் லவ்'...

2026-07-21 19:04:07
news-image

ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்சிக்'...

2026-07-21 17:15:28
news-image

'பட்ஜட்டை விட நான்கு மடங்கு கூடுதலாக...

2026-07-21 17:06:58
news-image

ஓக்டோபரில் வெளியாகும் நயன்தாராவின் 'ஹாய்'

2026-07-21 17:18:12
news-image

புதுமுக நடிகர் டி ஐ கபில்...

2026-07-21 16:56:30
news-image

நடிகர் ஜீவா நடிக்கும் 'தகப்பன்' படத்தின்...

2026-07-21 16:54:45
news-image

நடிகர் சூரி நடிக்கும் 'ஏழு கடல்...

2026-07-21 17:05:06
news-image

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து...

2026-07-20 15:16:17
news-image

நமீத் மல்ஹோத்ராவின் தயாரிப்பில் உருவான 'ராமாயணம்...

2026-07-20 15:14:32
news-image

தொழில் முனைவோராக உயர்ந்திருக்கும் நடிகை சாக்ஷி...

2026-07-20 15:12:10
news-image

மூன்று இந்திய தேசிய விருதுகளை வென்ற...

2026-07-20 14:23:11
news-image

இணைய தொடர்களுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதை...

2026-07-20 14:21:06