காதலி கொடுத்த முத்தம் கார­ண­மாக அமெ­ரிக்­காவின் ஒலிம்பிக் சம்­பியன் கில் ரொபர்ட்ஸ் தடைக்குள்ளான சம்­பவம் அரங்­கே­றி­யுள்­ளது. அமெ­ரிக்­காவின் ஓட்டப் பந்­தய வீர­ரான கில் ரொபர்ட்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் 4X400 தொடர் ஓட்­டத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

அவர் கடந்த மார்ச் மாதம் ஊக்­க­ம­ருந்து பயன்­ப­டுத்­தி­யுள்­ளாரா என்­பதை பரி­சோ­தனை செய்­வ­தற்­காக அவரிடமிருந்து மாதிரி எடுக்­கப்­பட்­டது. 

அவ­ரிடம் எடுக்­கப்­பட்ட மாதி­ரி பரி­சோ­தனை செய்­யப்­பட்­டதில், தடை செய்­யப்­பட்ட மருந்­தான புரொ­பெ­னெ­சிட்-ஐ பயன்­ப­டுத்­தி­யமை தெரி­ய­வந்­தது. இதனால் கடந்த மே மாதம் 5ஆம் திக­தி­யி­லி­ருந்து கில் ரொபர்ட்ஸ் போட்­டி­களில் பங்­கேற்க தடை­வி­திக்­கப்­பட்­டது.

இந்நிலையில் அமெ­ரிக்­காவின் ஊக்­க­ம­ருந்து தடுப்பு நிறுவனம், அவ­ரது உடலில் புரோ­பெ­னெசிட் எப்­படி வந்­தது என்­பதை விவ­ரித்­துள்­ளது.

பில் ரொபர்ட்ஸின் காதலி அலெக்ஸ் சலாசர். ரொபர்ட்­ஸிற்கு பரி­சோ­தனை மாதிரி எடுப்­ப­தற்கு முன்பு சலாசர் சைனஸ் பிரச்­சினை கார­ண­மாக புரொ­பெ­னெ­சிட்டை பயன்­ப­டுத்­தி­யுள்ளார்.

பரி­சோ­தனை மாதிரி எடுக்கும் அன்று ரொபர்ட்ஸ் தனது காத­லிக்கு முத்தம் கொடுத்­துள்ளார். அவர்கள் சந்­திக்­கும்­போ­தெல்லாம் ரொபர்ட்ஸ், தனது காத­லிக்கு தொடர்ந்து முத்தம் கொடுத்­துள்ளார். இதனால் அவ­ரது உடலில் அந்த மருந்து

சேர்ந்­துள்­ளது என்று அமெ­ரிக்க தீர்ப்­பாய அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

எனது காதலி மருத்­துவ சிகிச்சை மேற்­கொண்டு வந்தமை எனக்குத் தெரியாது. முத்தம் கொடுத்தால் தடை வரை செல்லும் என்பது குறித்து நான் அறிந்திருக்கவில்லை என்று ரொபர்ட்ஸ் கூறியுள்ளார்.