புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர சிகிச்சை..!?

09 Jul, 2025 | 05:51 PM
image

உலக அளவில் ஆண்டுதோறும் ஒன்பது மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் புற்றுநோய் பாதிப்பால் இறக்கிறார்கள் என்றும், ஆண்டுதோறும் இருபது மில்லியன் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் ஆண்டுதோறும் புற்று நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் தருணத்தில் ... புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் நவீன தொழில்நுட்பங்களும் வளர்ச்சி அடைந்து வருகிறது. 

அந்த வகையில் தற்போது புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் எட்ஜ் ரேடியோ சர்ஜேரி எனும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடனான சத்திர சிகிச்சை அறிமுகமாகி இருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

உடலில் ஒவ்வொரு பாகத்திலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் உடல் உள் உறுப்புகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நிவாரணம் அளிப்பதற்கான சத்திர சிகிச்சை -கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகள் சவாலானதாக இருக்கிறது. 

இந்நிலையில் சத்திர சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகிய இரண்டு சிகிச்சையும் இணைத்து நவீன தொழில்நுட்பத்துடன் வழங்கும் எட்ஜ் ரேடியோ சரஜேரி எனும் நவீன சத்திர சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 

இத்தகைய சிகிச்சை புற்றுநோய் பாதிக்கப்பட்டிருக்கும் இடத்தை துல்லியமாக அவதானித்து, அங்குள்ள புற்றுநோய் செல்களை முற்றாக அழிக்கிறது. இதனால் நோயாளிகள் புற்றுநோய் பாதிப்பிற்கான சிகிச்சை மற்றும் நிவாரண திறன் அதிகரித்திருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

வைத்தியர் நாகராஜ் தொகுப்பு அனுஷா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அயோட்டிக் டிஸ்சக்சன் எனும் இதய ரத்த...

2026-06-05 16:14:23
news-image

தழும்புகளற்ற தைரொய்க்டொமி எனும் நவீன சத்திர...

2026-06-04 17:33:23
news-image

மெட்டபொலிக் என்செபலோபதி ஹைபோநெட்ரீமியா எனும் பாதிப்பிற்குரிய...

2026-06-03 15:08:28
news-image

தனிமை அதிகமானால் குருதி அழுத்த பாதிப்பும்...

2026-06-02 17:55:09
news-image

நார்த்திசு கட்டிகளை அகற்றுவதற்கான நவீன சிகிச்சை

2026-06-01 14:38:53
news-image

தேசிய வைத்தியசாலையில் ரூ.99 மில்லியன் செலவில்...

2026-06-01 04:59:15
news-image

ஃபோர்னியர் கேங்க்ரீன் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2026-05-30 17:09:30
news-image

சர்க்கரை நோயாளிகளுக்காக அறிமுகமாகி இருக்கும் நவீன...

2026-05-29 18:11:40
news-image

பெல்விக் இன்ஃப்ளமேட்ரி டிசீஸ் எனும் நோய்...

2026-05-28 14:59:49
news-image

கால் ஆணி பாதிப்பிற்குரிய நவீன நிவாரண...

2026-05-29 11:52:55
news-image

மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒருவர் இரத்த...

2026-05-25 16:41:07
news-image

இன்ட்ராக்ரானியல் ஹெமடோமா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2026-05-25 15:29:33