அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள்

09 Jul, 2025 | 05:12 PM
image

(நமது நிருபர்)

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில் 27 சதவீதமானோர் சிறுவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்  தொடர்பில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் விசேட வைத்தியநிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவிக்கையில்,

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தில் போது நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 226 பாடசாலைகள் நுளம்பு மற்றும் நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களில்  27 சதவீதமானோர் சிறுவர்களாவர்.

இந்நிலையில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு  அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்துக்கமைய நேற்று செவ்வாய்க்கிழமை முதல்  அனைத்து பாடசாலைகளிலும் சுத்தம் செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் போது சுமார்  1 இலட்சத்து 44 ஆயிரத்து 250 இடங்கள்  அதிகாரிகளினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதன்போது 35 ஆயிரத்து 495 பகுதிகள் நுளம்புகள் பல்கிப் பெருகக்கூடிய இடங்களாக அடையாளம்  காணப்பட்டுள்ளதுடன், 4,275 பகுதிகளில் நுளம்புக் குடம்பிகளும் கண்டறியப்பட்டுள்ளன. அத்தோடு 3812 சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 982 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 8.5 சதவீதம் வழிப்பாட்டுத்தளங்கள் அமைந்திருந்த பகுதிகளில் நுளம்பு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டதுடன். 25 சதவீதமான வீடுகள் டெங்கு அபாயமிக்க இடங்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது வீடுகள் ஓரளவு பாதுகாப்பான நிலைமையில் உள்ளது.

சுகாதார அமைச்சின் வழிக்காட்டலுக்கமைய ஜூன் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்துக்கமைய 16 மாவட்டங்களை பிரதானக் கேந்திர நிலையமாகக் கொண்டு 111 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் விசேட நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், சுகாதார அதிகாரிகள் உட்பட 1100 குழுக்கள் இதற்காக ஈடுபடுத்தப்பட்டன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த தெனியாய பாடசாலைகள்,...

2026-05-12 00:09:26
news-image

ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் அழைக்கப்படுகிறேன் அச்சுறுத்தல்களுக்கு...

2026-05-11 14:18:02
news-image

வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக மீறும் அரசாங்கம்...

2026-05-11 14:40:31
news-image

எரிபொருள் கொள்வனவு சர்ச்சை: பகிரங்க விசாரணை...

2026-05-11 16:16:10
news-image

கபில சந்திரசேனவுக்கு ரங்க திஸாநாயக்க கடும்...

2026-05-11 14:26:37
news-image

செப்டெம்பர் மாதம் வரை மின்கட்டணம் திருத்தம்...

2026-05-11 16:17:00
news-image

அரசாங்கத்தின் ஒவ்வொரு சட்ட விரோத செயல்களுக்கு...

2026-05-11 17:30:46
news-image

தனிநபர் அடக்குமுறைக்கும் ஜனநாயக விரோதச் செயல்களுக்கும்...

2026-05-11 17:25:47
news-image

புதிய அரசியலமைப்பின் மூலம் முறையான அதிகாரப்...

2026-05-11 17:31:39
news-image

கபில சந்திரசேனவின் மரணம் ; உண்மையை...

2026-05-11 17:13:19
news-image

வவுனியா வடக்கில் வீதியோரத்தில் இரு மாதங்களுக்கு...

2026-05-11 21:41:29
news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11