பேராதனைப் பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்தவிருந்த முதலாம் வருட 100 வீத மட்ட வெளிவாரி புதிய பாடத்திட்ட பொதுக் கலைமாணி தொடர் தொலைக் கல்விப் பரீட்சைகள் (Distance and Continuing Education) ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி வரை இடம்பெறும் என்று அப்பல்கலைக்கழகம் பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளது.
இப்பரீட்சைகள் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நாட்டில் பரவிய ஒருவகைக் காய்ச்சல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மண்சரிவு வெள்ளம் என்பனவற்றால் பிற்போடப்பட்டிருந்தன.
ஏப்ரல் மாதம் இடம்பெறவிருந்த பொதுக் கலைமாணி பட்டப் பரீட்சைக்கான அனைத்து மாணவர்களும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள இப்பரீட்சைக்குத் தோற்றத் தகுதியானவர்களாகக் கொள்ளப்படுவார்கள். அதேவேளை, ஏப்ரல் மாதம் நடாத்தப்படவிருந்த பரீட்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் அனைத்துப் பரீட்சார்த்திகளுக்கும் புதிய அனுமதிப்பத்திரம் அனுப்ப ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தொடர் தொலைக் கல்வி நிலையத்தின் பிரதிப் பதிவாளர் ஆர்.வி.எஸ். ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.
தொடர் தொலைக்கல்வி நிலையத்தினால் ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவிருக்கின்ற மேற்படி பரீட்சைகள் நாடெங்கிலும் வெவ்வேறு பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்காக ஏற்கனவே பணம் செலுத்தியவர்கள் மீண்டும் பணம் செலுத்தத் தேவையில்லை என்றும் பரீட்சையிலிருந்து விலகிக் கொள்வதாக வேண்டுகோள்களை முன்வைத்த, அதேபோல் பரீட்சைக்கு விண்ணப்பங்களை அனுப்பத் தவறிய மாணவர்கள் 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடாத்தப்படவுள்ள பரீட்சைக்கு விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கடைசித் திகதி நாளை ஆகும். பரீட்சைக்கான நேரசூசி, பரீட்சை மத்தியஸ்தானம் என்பன சுட்டிலக்கத்திற்கேற்ப www.pdn.ac.lk/cdce ஊடாக தெரியப்படுத்தப்படும் என்று பேராதனைப் பல்கலைக்கழக தொடர் தொலைக் கல்வி நிலையத்தின் பிரதிப் பதிவாளர் ஆர்.வி.எஸ். ராஜபக் ஷ அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM