Colombo EV Motor Show 2025 கண்காட்சியில் RV 1 மற்றும் RV 1+ மின்சார மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ள Evolution Auto

09 Jul, 2025 | 12:25 PM
image

Evolution Auto (இவலூஷன் ஒட்டோ) தனது புதிய RV 1 மற்றும் RV 1+ மின்சார மோட்டார் சைக்கிள்களை Colombo EV Motor Show 2025 கண்காட்சியில் அறிமுகப்படுத்தி, இலங்கையின் போக்குவரத்து தீர்வுகளில் புதிய தரத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பு BMICH வளாகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி, இலங்கையின் மிகப்பெரும் சர்வதேச மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் கண்காட்சியாகும்.

நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த மின்சார மோட்டார் சைக்கிள்கள், இலங்கையர்களுக்கே உரித்தான், சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து யுகத்திற்கு வழி வகுக்கின்றன.

Evolution Auto (Pvt) Ltd. நிறுவனத்தின் குழும பிரதம செயற்பாட்டு அதிகாரி விரான் டி சொய்சா இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்:

“Evolution Auto குழுமத்தின் ஒரு அங்கமான நிறுவனம் எனும் வகையில், இலங்கையின் மின்சார வாகனப் பரிமாணத்தை மாற்றியமைப்பதே எமது இலட்சியமாகும். நிலைபேறான போக்குவரத்தை அனைவருக்கும் எளிதாக கொண்டு சேர்ப்பதே இந்த அர்ப்பணிப்பின் நோக்கமாகும்.” என்றார்.

நவீன யுகத்தின் வாகன பயன்பாட்டாளர்களை மனதில் கொண்டு பொறியியலில் கவனம் செலுத்தப்பட்டுள்ள RV 1 மற்றும் RV 1+ மின்சார மோட்டார் சைக்கிள்கள், கட்டுப்படியான விலை, பிரயோக ரீதியான தன்மை, செயல்திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

எரிபொருளின் விலை அதிகரிப்பும், சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான போக்குவரத்து தீர்வுகளுக்கான அவசரத் தேவைகளின் அடிப்படையில், இந்த மின்சார மோட்டார்சைக்கிள்குகளுக்கான வலுவான சந்தை கேள்வி எழுந்துள்ளது.

Evolution Auto (Pvt) Ltd. நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஸஹ்ரான் ஸியாவுதீன் கருத்து வெளியிடுகையில்:

“Revolt ஆனது புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தன்மை ஆகியவற்றின் சிறப்பான இணைவாகும். இலங்கையில் இந்த மின்சார வர்த்தகநாமத்தை அறிமுகப்படுத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

RV1 மற்றும் RV1+ மின்சார மோட்டார் சைக்கிள்கள், நாளாந்த பயணத்தை பொருளாதார ரீதியில் எளிதாக்குகின்றன. எந்தவொரு எரிபொருள் செலவுகளும் இல்லாததால், பயணச் செலவுகளை இவை கணிசமாக குறைக்கின்றன. ஒயில் மாற்றுதல் உள்ளிட்ட சிக்கலான பராமரிப்புகள் தேவையற்ற இவ்வாகனங்கள், குறைந்த பராமரிப்பு வடிவமைப்பு காரணமாக அதிக நடைமுறைசார்ந்த பயன்களை கொண்டுள்ளன.

இவை ஒரே சார்ஜில் 160km இற்கும் அதிக பயணத் தூரத்தை மேற்கொள்ளும் அதிக வினைத்திறனை கொண்டுள்ளமை காரணமாக, நகர்ப்புற மற்றும் புறநகர் வீதிகளில் பயணிக்க சிறந்த தெரிவாக அமைகின்றன. மேலும், வேகமான சார்ஜிங் வசதி மற்றும் மின்கலங்களை மாற்றக்கூடிய வசதிகள் போன்றன தொடர்ச்சியான பயணங்களுக்கு வசதியானதாக அமைகின்றன.

சொகுசு மற்றும் நீடித்த தன்மையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இவை இலங்கையின் மாறுபட்ட வீதிகளுக்கு ஏற்றதாக அமைகின்றன. தொழில்புரிவோர், பொருட்கள் விநியோக பணியில் ஈடுபடுவோர் மற்றும் நம்பகமான, சிக்கனமான போக்குவரத்தை நாடுபவர்களுக்கு இம்மின்சார மோட்டார் சைக்கிள்கள் சிறந்தவையாகும்.

இவை தவிர, இந்த மின்சார மோட்டார் சைக்கிள்கள், சூழலை மாசுபடுத்தும் வாயுக்களின் வெளியேற்றங்கள் அற்றவை என்பதன் காரணமாக, தூய்மையான காற்று மற்றும் சுகாதாரம் மிக்க நகரச் சூழலை உருவாக்க உதவுகின்றன. இது உலகளாவிய காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவும் செயற்பாடாக அமைகிறது.

 மின்சார போக்குவரத்தை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்குடன், Evolution Auto இந்த அறிமுகத்தை மேற்கொண்டுள்ளது. நெகிழ்வான கட்டணத் திட்டங்கள், கட்டுப்படியான மாதத் தவணைகள் (EMIs), மற்றும் விசேட அறிமுக தள்ளுபடிகள் ஆகிய வசதிகள் மூலம் இந்த மின்சார மோட்டார் சைக்கிள்கள் பரந்துபட்ட பயணிகளை சென்றடைவதை நோக்கமாக கொண்டுள்ளன.

RV 1 மற்றும் RV 1+ ஆகிய மின்சார மோட்டார் சைக்கிள்கள், நாடெங்கிலும் உள்ள Evolution Auto காட்சியறைகளில் சோதனை ஓட்டத்திற்காகவும் முன்பதிவுகளுக்காகவும் கிடைக்கின்றன. புத்தாக்கமான, சுற்றுச்சூழலுக்கு பொறுப்புணர்வு கொண்ட தீர்வுகளை வழங்குவதன் மூலம், இலங்கையில் மின்சார போக்குவரத்து தீர்வுகளின் எதிர்காலத்தை மாற்றுவதில் Evolution Auto முன்னணியில் நின்று செயற்படுகிறது.

Evolution Auto (Pvt) Ltd எளிமையாகவும், சுற்றுச்சூழலுக்கு நட்பான, புத்தாக்கமான மின்சார வாகனங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு, எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு செயற்படும் போக்குவரத்து வர்த்தகநாமமே Evolution Auto ஆகும். கட்டுப்படியான விலை மற்றும் நடைமுறை ரீதியான வசதி ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்ற இந்நிறுவனம், பொதுமக்களின் அன்றாட போக்குவரத்தை சிறப்பு வாய்ந்ததாக மாற்றும் நோக்குடன் செயற்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவின் ஷென்செனில் உலகின் முதல் வர்த்தக...

2026-07-17 14:01:03
news-image

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஊக்குவிக்கும்...

2026-07-06 14:29:31
news-image

வட்ஸ்அப்பில் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'யூசர்நேம்' வசதி...

2026-06-30 10:08:48
news-image

அதிநவீன செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு தற்காலிக...

2026-06-06 14:35:10
news-image

வட்ஸ்அப்புக்கான முக்கிய புதிய அம்சத்தை அறிவித்தது...

2026-05-14 12:00:55
news-image

அண்ட்ரோய்ட் 6 க்கும் குறைந்த பதிப்புகளை...

2026-04-27 14:30:40
news-image

ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய பிரதம நிறைவேற்று...

2026-04-21 09:54:01
news-image

ஷங்காயில் 93 ஆவது சீன சர்வதேச...

2026-04-10 11:03:55
news-image

பாலைவன மணலை பயன்படுத்தி வீதி கட்டுமானமா?...

2026-04-01 16:03:45
news-image

வட்ஸ் அப்பில் அதிரடி மாற்றங்கள்

2026-03-27 12:55:39
news-image

வட்ஸ் அப்பில் புதிய ‘After Reading’...

2026-03-23 13:07:10
news-image

வட்ஸ்அப்பில் புதிய அப்டேட் : இனி...

2026-03-21 12:13:03