கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் கற்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி போதைப்பொருள் கடத்தல்காரரான “கிரிக்கெட் சுத்தா” என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி திங்கட்கிழமை (07) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மாத்தறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
துபாயில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ”தம்மிட்ட சுமித்” என்பவரின் தலைமையில் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 29 வயதுடைய “கிரிக்கெட் சுத்தா” என்பவர் போதைப்பொருள் கடத்தல்காரரான ”தம்மிட்ட சுத்தா” என்பவருக்கு சொந்தமான போதைப்பொருட்களை பல்வேறு பிரதேசங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM