மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி என கூறி பண மோசடி செய்த நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

09 Jul, 2025 | 11:34 AM
image

மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி  என கூறி 01 இலச்சத்து 28 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்  ஒருவரை எதிர்வரும் 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (08) உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் வெளிநாட்டு முகவர் ஒருவரிடம் வெளிநாடு செல்வதற்காக பணத்தை கொடுத்து ஏமாறிய நிலையில் அந்த வெளிநாட்டு முகவருக்க எதிராக மாவட்ட விசேட குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.

இதனை அறிந்து கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்தவரும் முன்னாள் இராணுவ புலனாய்வு பிரில் செற்பட்டுவந்தவர் அவர்களிடம் தான் விசேட குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி என கூறி குறித்த வெளிநாட்டு முகவரிடம் உடன் பணத்தை பெற்று தருவாகவும்  அதற்கு பணம் தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபரிடம் ஒருவர் 01 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவையும் மற்றவர் 3 ஆயிரம் ரூபா உட்பட ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் வெளிநாட்டு முகவரிடம் பணத்தை வாங்கி கொடுக்காமல்  நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளதையடுத்து அவருக்கு எதிராக பணத்தை கொடுத்து ஏமாறிய இருவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

போலி குற்றப்புலனாய்வு பிரிவினராக நாடகமாடி வந்த அவரை அவரது வீட்டில் வைத்து திங்கட்கிழமை (07) இரவு கைது செய்து  அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து நேற்று செவ்வாய்கிழமை (08) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 21 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 15:39:58
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32
news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38
news-image

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள்...

2026-02-12 14:56:40
news-image

பிலியந்தலையில் விசேட சோதனை ; போதைப்பொருள்...

2026-02-12 14:05:59
news-image

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அடிப்படை உரிமைகள்...

2026-02-12 14:53:17