தொடர்ந்து 8 வது தடவையாகவும் 'மிகவும் பிரபலமான வணிகச்சின்னம்' என்ற விருதைப் பெற்று ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைப்

09 Jul, 2025 | 11:22 AM
image

இலங்கைக் காப்புறுதி ஆயுள் (ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைப்) (SLICLL) மீண்டும்  ஒரு தடவை நாட்டின் மிகவும் பிரபலமான ஆயுள் காப்புறுதி  வணிகச்சின்னம் என  (LMD)  இன் புதிய அறிக்கையின் பிரகாரம் தொடர்ச்சியாக 8 வது தடவையாகவும்  விருதினைப் பெற்றுள்ளது. 

இலங்கைக் காப்புறுதி ஆயுள் (ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைப்)  அதன் வணிக நடவடிக்கைகளின் போது  இந்த நாட்டு மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் நலன்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பாக உணர்திறன் மிக்கதாக செயற்படுகின்றத் என்பதற்கு, இந்தப் பாராட்டுக கிடைக்கப்பெற்றுள்ளமை ஒரு சான்றாகும்.

வாடிக்கையாளர்களுக்கு உயர் மட்டத்திலான சேவையையும் மற்றும்  அவர்களுக்கு சிறந்தவைகளையும் வழங்குவதனை மையமாகக் கொண்ட இலங்கைக் காப்புறுதி ஆயுள் (ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைப்) தனது வாடிக்கையாளர்களுக்கு காலத்திற்கு ஏற்றவாறான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்குத் துரிதமாகச் செயற்படுகிறது. 

2024 ஆம் ஆண்டில், கோரிக்கைகள் மற்றும் முதிர்வுகளுக்காக ஒரு மாதத்திற்கு ரூபா. 1 பில்லியனுக்கும் அதிகமான தொகையைச் கொடுப்பனவு செய்துள்ளது.

இலங்கைக் காப்புறுதி ஆயுள் (ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் லைப்) இன் நிதி வலிமை, வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் மற்றும் அதன் கடமைகளை நிறைவேற்றுவதில் உள்ள அர்ப்பணிப்பு என்பவற்றை இது பிரதிபலிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்