15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான விடயமாகும் என பதுளை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ். பாலிபன தெரிவித்துள்ளார்.
உலக தோல் சுகாதார தினத்தை முன்னிட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சிறுவர்கள் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விட்டு காட்டுக்குள் சென்று வெவ்வேறு நபர்களுடன் கூடி பழகி நாளை கழித்து வந்துள்ளனர்.
இந்நிலையிலேயே, 15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுவனை அவனின் சம்மதத்துடனும் பாலியல் துஷ்பிரயோகம் செய்வது சட்டவிரோதமானது.
பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கனையில் உள்ள சொரபொர வெவ எனும் குளம் பகுதியில் சுமார் 15 சிறுவர்கள் சுற்றித்திரிவது பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM