(நா.தனுஜா)
யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை செவ்வாய்க்கிழமை (08) கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகாததன் காரணமாகவும், அதுகுறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படாததன் விளைவாகவும் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தமை குறித்து வருத்தமடைவதாகத் தெரிவித்துள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பல் துறை, சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, உரிய ஆயத்தங்களின் பின்னர் புகையிரதம் கல்கிசையிலிருந்து புறப்படுவதற்குத் தயார்நிலையில் உள்ளபோது மாத்திரம் அதுபற்றி மக்களுக்கு அறிவிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை (இன்டர்சிட்டி) செவ்வாய்க்கிழமை (8) அதிகாலை கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கல்கிசையிலிருந்து ஆரம்பமாகவிருந்த அதிவேக புகையிரதசேவை முன்னறிவிப்பின்றி அதிகாலை 5.45 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் வகையில் மீள்திருத்தம் செய்யப்பட்டது.
அதன் விளைவாக அசௌகரியத்துக்கு உள்ளான பயணி ஒருவர், அவரது பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளங்களில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்,
யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு, அதிகாலை 5.25 மணியளவில் வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை வந்தடையும் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அது முன்னறிவிப்பு எதுவுமின்றி இரத்துச்செய்யப்பட்டது.
வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் காத்திருந்த பயணிகள் வினவியதன் பின்னரே, யாழ் கடுகதி புகையிரதசேவை அதிகாலை 5.45 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் எனப் பதிலளிக்கப்பட்டது.
இதுகுறித்து முன்கூட்டியே ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படாததன் காரணமாக பயணிகள் பலர் அதிகாலையில் மிகச்சொற்ப நேரத்துக்குள் வெள்ளவத்தையில் இருந்து கோட்டை புகையிரத நிலையத்துக்குச் செல்வதற்கு வாகனங்களின்றி மிகுந்த அசௌகரியத்துக்கு உள்ளாகினர்.
இச்சம்பவம் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கும், குடும்பமாகப் பயணிப்பதற்கு தயாராக வந்திருந்தவர்களுக்கும் அநாவசியமான மனவழுத்தத்தையும், குழப்பத்தையும் தோற்றுவித்தது.
அதுமாத்திரமன்றி கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட கடுகதி புகையிரசேவைக்கான டிக்கெட் கட்டணமாக 3,600 ரூபா அறவிடப்படுகின்ற போதிலும், அப்புகையிரதம் இருக்கைகள் உடைந்த நிலையில் சீராகப் பராமரிக்கப்படாமலேயே இருந்தன.
இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விசேட கவனம் செலுத்தவேண்டும் எனப் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து அப்பயணியின் எக்ஸ் தளப்பதிவின்கீழ் பதிவின்கீழ் பதிலளித்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 'இதுகுறித்து நான் புகையிரதத்திணைக்களத்திடம் கேட்டறிந்தேன் அவர்களால் ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு யாழ்ப்பாணத்துக்கான கடுகதி புகையிரதசேவை இன்றைய தினம் கல்கிசை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகவில்லை.
எனவே அதற்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும், புகையிரதம் கல்கிசையில் இருந்து புறப்படுவதற்குத் தயார்நிலையில் உள்ளபோது மாத்திரம் அதுபற்றி பொதுமக்களுக்கு அறிவிக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.
அதுமாத்திரமன்றி இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக பொதுமக்களிடம் மன்னிப்புக்கோரி அறிவிப்பொன்றை வெளியிடுமாறும் அவர்களிடம் வலியுறுத்தினேன்.
இவ்விடயத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக அமைச்சின் சார்பில் வருத்தமடைகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM