Image result for ஐக்­கிய தேசியக் கட்சி virakesari

சுதந்­திரக் கட்­சியின் 18 பாரா­ளு­மன்ற உறுப்பி­னர்கள் வில­கி­னால் கூட நல்­லாட்சி அர­சாங்கத்தை அசைக்க முடி­யாது. ரணில் விக்­கி­ர­ம­சிங்கவை பிர­தமர் பத­வியிலிருந்து நீக்க நினை த்தால் அது கன­வா­கத்தான் அமையும். நல்­லாட்சியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட முடி­யு­மாயின் தொடர்ந்து பய­ணிக்­கலாம். இல்­லையேல் விலகிச் செல்­லலாம் என ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சூளு­ரைத்­தனர். நல்­லாட்சி அர­சாங்­கத்தை கவிழ்க் கும் சதித்­திட்­டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நேர­டி­யாக தலை­யிட்­டுள்ளார். ஆகவே ஆட்சி மாற்­றமோ, பிர­தமர் மாற்­றமோ, கட்சி தாவல்­களோ இடம்­பெ­றாது . மேலும் ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் இந்த ஆட்­சி­யையும் நாம் பாது­காப்போம் என்றும் குறப்­பிட்­டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒரு சிலர் அர­சாங்­கத்தில் இருந்து விலகி சுயா­தீ­ன­மாக செயற்­பட போவ­தாக அறி­வித்­தமை தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு காலி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துலால் பண்­டா­ரி­கொட குறிப்­பி­டு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் 18 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சுயா­தீ­ன­மாக செயற்­பட போவ­தாக கூறு­கின்­றனர். இவ்­வா­றான தக­வல்­களை ஊட­கங்­களே வெளி­யிட்­டன. எனினும் எக்­கா­ரணம் கொண்டு இந்த அர­சாங்­கத்தை கவிழ்க்க முடி­யாது. அதி­கா­ரத்தை மாத்­திரம் இலட்­சி­ய­மாக கொண்ட தோல்வி அடைந்­த­வர்­களே ஆட்சி கவிழ்ப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளனர். எப்­ப­டி­யா­வது ஆட்­சியை கவிழ்க்­கவே முயற்­சிக்­கின்­றனர். 

உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச முத­லீ­டு­களை நிறுத்­து­வ­தற்­காக இவ்­வா­றான தக­வல்கள் வெளி­வ­ரு­கின்­றதோ என்ற சந்­தேகம் எமக்கு உள்­ளது. சுதந்­திர கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் இவ்­வா­றான அறி­விப்­புக்கு பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உள்ளார். ஆகவே ஆட்­சியை கவிழ்க்கும் சதி திட்­டத்தில்  முன்னாள் ஜனா­தி­பதி நேர­டி­யாக தலை­யிட்­டுள்ளார். இந்த ஆட்­சியை கவிழ்க்க முனை­வ­தா­னது முன்னாள் ஜனா­தி­ப­திக்கு ஜனா­தி­பதி தேர்­தலில் ஏற்­பட்ட நிலை­மையே ஏற்­படும். எவ்­வா­றா­யினும் இவ்­வா­றான சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நாம் தயா­ராக உள்ளோம். நாம் ஜனா­தி­பதி, பிர­தமர் இரு­வ­ரையும் பாது­காப்போம். ஆட்சி கவிழ்­கக விடாது பாது­காப்போம்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வியில் இருந்து நீக்க வேண்டும் என்றே ஒரு சில சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கூறு­கின்­றனர்.  கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது அர­சாங்­கத்தில் இருந்து விலகி வந்­த­வுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் அவர் தெரி­வித்த கருத்தை நினைவு கூருங்கள். பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நிய­மிப்பேன் என கூறினார். இதனை கூறியே தேர்தல் பிர­சா­ரங்­க­ளிலும் ஈடுப்­பட்டார். ஆகவே  ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக்க மக்கள் ஆணை உள்­ளது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வியில் நீக்க நினைப்­பது கன­வா­கவே அமையும். ஆக­வே­அ­ர­சாங்­கத்தின் ஒரு மயி­ரி­ழையையும் அசைக்க முடி­யாது. எனினும் சுதந்­திரக் கட்­சியின் அனை­வ­ரி­னதும் நிலைப்­பாடு இது­வல்ல .

அத்­துடன் 2015 தேர்­தலின் வெற்றி பெற்ற பின்னர் குப்பை மேடு, கடன் சுமை, மாலபே சைட்டம் மருத்­துவ கல்­லூரி என பல பிரச்­சி­னை­களை நாமே சுமக்க வேண்டி ஏற்­பட்­டது. இந்த பிரச்­சி­னைகள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் தோற்­று­விக்­கப்­பட்­ட­தாகும். எனினும் இதனை நாம் வெற்­றி­க­ர­மாக முகங்­கொ­டுத்தோம். அத்­துடன் சர்­வ­தேச அழுத்­த­தையும் இல்­லாமல் செய்தோம்.  

அத்­துடன் மக்­களின் உடை­மை­களை கொள்ளை அடித்­த­வர்கள் அனை­வ­ருக்கும் சட்­டப்­படி தண்­டனை கிடைக்கும். இந்த ஆட்­சியில் தொடர்ந்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும். எனினும் அர­சியல் ரீதி­யாக எந்­த­வொரு தலை­யீடும் செய்ய மாட்டோம்.  இதன் பின்­ன­ணியில் கும்பல் உள்­ளது. மஹிந்த ராஜ­பக்ஷ இதில் நேர­டி­யாக தலை­யிட்­டுள்ளார். எந்த தொனிப்­பொ­ருளை எடுத்­தா­வது ஆட்சி பீட­மே­றவே முயற்­சிக்­கின்றார். அத்­துடன் மத விவ­கா­ரங்­களை கொண்டு நாம் செயற்­பட மாட்டோம்.  

முஜிபுர் ரஹ்மான்

இது தொடர்பில் கொழும்பு மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் கேச­ரிக்கு குறிப்­பி­டு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இருந்து விலக போவ­தாக சுதந்­திரக் கட்­சிகள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் கூறி­யுள்­ளனர். இவ்­வா­றான கருத்­து­களை கூற கூடி­ய­வர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தான் தற்­போது பெரும்­பான்மை உள்­ளது என்­ப­தனை நினைவில் வைத்­துக்­கொள்ள வேண்டும். எந்த கார­ணத்தை கொண்டும் இந்த அர­சாங்­கத்தை கவிழ்க்க முடி­யாது. நாம் நினைத்தால் தனித்தும் ஆட்சி அமைப்போம். எனவே எக்­கா­ரணம் கொண்டும் சுதந்­திரக் கட்சி எம்.பிக்கள் அர­சாங்­கத்தை விட்டு சென்­ற­மைக்­காக ஆட்சி மாற்றம் ஏற்­ப­டாது. மேலும் இவர்­க­ளுக்கு ரணில் விக்­கி­ர­சிங்­கவை பிர­தமர் பத­வியில் இருந்து அகற்­றவே முடி­யாது. ஆகவே ஆட்சி மாற்­றமோ, பிர­தமர் மாற்­றமோ, கட்சி தாவல்­களோ இடம்­பெ­றாது என்றார்.

சமிந்த விஜே­சிறி

இது தொடர்பில் பதுளை மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமிந்த விஜே­சிறி குறிப்­பி­டு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இருந்து எவர் விலகி போனாலும் இந்த அர­சாங்­கத்தை கவிழ்க்க முடி­யாது. நல்­லாட்சி இருந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட முடி­யு­மாயின் செல்­லலாம்.இல்­லையேல் விலகி செல்­லலாம். குறிப்­பிட்ட ஒரு சிலர் போன­மைக்­காக ஆட்சி மாறாது. சுதந்­திரக் கட்­சியை சேர்ந்த 18 பேர் போனாலும் மிகுதி 40 பேரை கொண்டு நாம் ஆட்சியை முன்னெடுத்து செல்வோம் என்றார்.

அமைச்சர் நவீன் திசாநாயக்க

இது தொடர்பில் அமைச்சர் நவீன் திசாநாயக்க குறிப்பிடுகையில்,

எந்தவொரு அரசாங்கமானாலும் இரண்டு வருடங்களின் பின்னர் பிரபலம் குறைவடைந்து விடும். மகாவலி திட்டம் உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவின் ஆட்சியில் பிரபல அமைச்சர்கள் இருந்து 1981 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 52 சதவீத வாக்கே ஜே.ஆர் ஜெயவர்தனவிற்கு கிடைத்தது. ஆகவே அரசாங்கத்தின் பிரபலம் குறைந்தமை குறித்து அலட்டிக்கொள்ள தேவையில்லை என்றார்.