திரைப்பட இயக்குநர்கள் இணைந்து வெளியிட்ட 'கைமேரா ' படத்தின் இசை

08 Jul, 2025 | 05:09 PM
image

அறிமுக நடிகர் LNT எத்தீஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' கைமேரா ' படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக நடைபெற்ற பிரத்யேக விழாவில் திரைப்பட இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, மீரா கதிரவன் மற்றும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படத்தின் ஓடியோவை வெளியிட்டனர்.

இயக்குநர் மாணிக் ஜெய் . N இயக்கத்தில் உருவாகி வரும் ' கைமேரா'  படத்தில் LNT எத்தீஷ், மாணிக் ஜெய், தாரை கிருஷ்ணன், சௌம்யா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் சிவா இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஜெய் ருத்ரா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மாணிக் ஜெய் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''என்னுடைய திரைப்படத்தின் படத்தொகுப்பு பணியில் தாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்ட போது உடனடியாக இப்படத்தில் கதையை எழுதத் தொடங்கினேன். படப்பிடிப்பில் ஒட்டுமொத்த படக் குழுவினரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரும் என நம்புகிறேன். '' என்றார்.

இதனிடையே மனித உடலுக்குள் மிருகங்களின் மரபணு செலுத்தப்பட்டால் அவர்களின் வாழ்வியல் மற்றும் நடவடிக்கைகள் எப்படி மாற்றம் பெறும் என்பதை விறுவிறுப்பாக பேசியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை பேசும்...

2026-08-11 20:58:57
news-image

நடிகர் பஹத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-08-11 16:51:42
news-image

நடிகர் துல்கர் சல்மானின் 'ஐ அம்...

2026-08-11 16:21:14
news-image

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத்...

2026-08-11 16:19:16
news-image

சிக்கலில் சிக்கிய ‘சியான்’ காணொளியை நீக்கினார்..!

2026-08-11 13:07:57
news-image

திடீரென உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை.....

2026-08-11 10:20:42
news-image

சங்ககிரி ராஜ்குமார் நடிக்கும் 'ஒன் மேன்'

2026-08-10 17:11:32
news-image

ஜேம்ஸ் வசந்தனின் துள்ளல் இசையாக வெளியாகியுள்ள...

2026-08-10 17:11:21
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-10 17:09:05
news-image

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து வழங்கும் லேடி...

2026-08-10 16:51:16
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் யாஷ்...

2026-08-10 16:44:49
news-image

சூப்பர் குட் பிலிம்ஸ் அறிமுகப்படுத்தும் 45வது...

2026-08-10 16:42:52