சுவிற்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ரொஜர் பெடரர் 8 ஆவது தடவையாக விம்பிள்டன் பட்டத்தைச் சுவீகரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் குரோஷியா நாட்டைச் சேர்ந்த மரீன் செலிக்கை  6-3, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிக்கொண்ட ரொஜர் பெடரர் 8 ஆவது தடவையாக விம்பிள்டன் பட்டத்தை சுவீகரித்துள்ளார்.

லண்டனில் இன்று இடம்பெற்ற விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரொஜர் பெடரர் மரீன் செலிக்கை எதிர்கொண்டார்.

ஏற்கனவே 7 தடவைகள் விம்பிள்டன் பட்டத்தை சுவீகரித்துள்ள இம்முறை 8 ஆவது தடவையாகவும் விம்பிள்டன் பட்டத்தை சுவீகரித்துள்ள நிலையில், 19 தடவைகள் கிராண்ஸ்லாம் பட்டத்தையும்  வென்று சாதனைப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.