அரசியல் தலையீட்டுடன் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்படவில்லை : ஜனாதிபதிக்கு சமர்ப்பித்த அறிக்கை விரைவில்  பாராளுமன்றத்தில் - அனில் ஜயந்த பெர்னாண்டோ

Published By: Digital Desk 2

08 Jul, 2025 | 03:00 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

அரசியல் தலையீட்டுடன் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்படவில்லை. ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை வெகுவிரைவில்  சபைக்கு சமர்ப்பிப்போம்  சமூக வலைத்தளங்களில்  பரிமாற்றப்படும் அறிக்கையையே எதிர்க்கட்சியின் உறுப்பினர் சபைக்கு சமர்ப்பித்தார் என பொருளாதார அபிவிருத்தி திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08)  நடைபெற்ற  அமர்வின் போது 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித்  தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஜனவரி மாதம்  சுங்கத்தில் இருந்து கொள்கலன்களை  விடுவிக்கும்  போது ஏற்பட்ட நெரிசலுக்கு  தீர்வு காண்பதற்கு  சுங்கத் திணைக்களத்துக்கு தேவையான வசதிகள் நிதியமைச்சினால் ஏற்படுத்திக்  கொடுக்கப்பட்டது.சுயாதீனமான முறையில் தீர்மானங்கள் எடுப்பதற்கு முழுமையான அதிகாரமளிக்கப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் பரிசோதனைகள் ஏதுமின்றி  சுங்கத்தில் இருந்து 323  கொள்கலன்கள்  விடுவிக்கப்பட்டதாக  எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினார்கள்.இவ்விடயத்தின் உண்மையை ஆராய்வதற்கு   2025.01.30 ஆம் திகதியன்று ஜனாதிபதியின்  பணிப்புக்கு  அமைய  நிதியமைச்சின் செயலாளர்  ஐந்து உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில்   குழு ஒன்றை நியமித்தார்.

அரசியல் தலையீட்டுடன் இந்த கொள்கலன்கள்   பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர்  முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.  இந்த கொள்கலன்கள் விடுவிப்பில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றிருக்குமாயின் அதற்குரிய நடவடிக்கைகளை  உரிய முறையில் மேற்கொள்வோம்.

ஜனாதிபதியின்  செயலாளரால்  நியமிக்கப்பட்ட குழுவின்  அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பாராளுமன்றத்துக்கு வெகுவிரைவில்  சமர்ப்பிப்போம். சமூக வலைத்தளங்களில் பரிமாற்றப்படும் அறிக்கையின் பதிப்பினையே எதிர்க்கட்சியின் உறுப்பினர் சபைக்கு சமர்ப்பித்தார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியின் ஓலம்': எதிர்வரும் 14 -...

2026-08-08 17:44:05
news-image

மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க...

2026-08-08 19:25:51
news-image

சிறைச்சாலை மோதல்கள்: 5 வாரங்களில் 36...

2026-08-08 16:46:41
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36