சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற MasterChef நிகழ்ச்சியின் முதலாவது இலங்கை நிகழ்வானது கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டு வரலாறு படைத்துள்ளது.
நிகழ்ச்சி உரிமைகளை வழங்குவதில் பாரிய நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற Banijay Entertainment என்பதன் சர்வதேச விநியோகப் பிரிவான Banijay Rights உரிமையாண்மையின் கீழ் நாட்டில் சமையல் கலையில் பேரார்வத்தைத் தூண்டி, உள்நாட்டு திறமைசாலிகள் சர்வதேச மேடையில் பிரகாசிப்பதற்கு வாய்ப்பை வழங்கவுள்ளது.
Reality TV Productions மற்றும் Nilendra Deshapriya Productions ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து படைக்கும் MasterChef Sri Lanka விமரிசையான வெளியீட்டு நிகழ்வில் புகழ்பூத்த நட்சத்திரங்கள் அடங்கிய நடுவர் அணியும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
நட்சத்திர சமையல் கலை வல்லுனர், உணவக உரிமையாளர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் பீட்டர் குருவிட்ட அவர்களின் தலைமையில், MasterChef Australia நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான சவிந்திரி (சௌவ்) பெரேரா, இலங்கையின் உயர் தர உணவக மேதை றொஹான் பெர்னாண்டோபுள்ளே, மற்றும் அனுபவம்மிக்க சமையல் கலை வல்லுனர் கபில ஜெயசிங்க ஆகியோர் நடுவர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
உலகினை ஆட்கொண்டுள்ள இந்த நிகழ்ச்சி, தற்போது சர்வதேச அளவில் 71வது நாட்டிலும் அறிமுகமாகியுள்ளதுடன், கின்னஸ் உலக சாதனைப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM