(ஆர்.யசி)

சர்வதேச தரப்பையும் புலம்பெயர்  அமைப்புகளையும் திருப்திப்படுத்தவே இலங்கை பாதுகாப்பு படைகள் தண்டிக்கபட்டு வருகின்றனர்.  நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இராணுவ வீரர்களை இராணுவ குற்றத்தில் தண்டிக்கவே இந்த அரசாங்கம் முழுமையாக முயற்சி செய்து வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்கவை கைதுசெய்தமையும் சர்வதேச சதித்திட்டம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு ஜூலை 19ஆம் திகதி விரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொமடோர் டி.கே.பி.தசநாயக்கவை பார்க்கச் சென்ற விமல் வீரவன்ச எம்.பி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.