இனியபாரதியின் முன்னாள் சாரதி சிஜடியினரால் கைது

Published By: Digital Desk 3

08 Jul, 2025 | 10:01 AM
image

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த இனிய பாரதியின் முன்னாள் வாகன சாரதியான தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த செழியன் என்றழைக்கப்படும்  அழகரட்ணம் யுவராஜ் என்பவரை திங்கட்கிழமை (7) கல்முனை நகரில் வைத்து சிஜடியினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றிய இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார அவரது சகா தச.தவசீலன் ஆகியோர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (6) சிஜடியினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இனிய பாரதியின் முன்னாள் சாரதியான திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் முதலாம் பிரிவைச் சேர்ந்த தனியார் பஸ் வண்டி சாரதியாக கடமையாற்றிவரும் செழியன் என்றழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் என்பவர் நேற்று திங்கட்கிழமை கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் பஸ் வண்டியை செலுத்திச் சென்ற நிலையில் கல்முனை பஸ்தரிப்பு நிலையத்தில் காத்திருந்த சிஜடியினர் கல்முனை நகர் பஸ்தரிப்பு நிலையத்துக்கு பஸ் வண்டி வந்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2...

2026-07-16 16:52:03
news-image

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை...

2026-07-16 16:48:26
news-image

"நேர்மைமிக்க கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா"...

2026-07-16 16:36:18
news-image

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்...

2026-07-16 16:18:53
news-image

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு...

2026-07-16 15:50:29
news-image

ஜனாதிபதி தலைமையில் துறைமுகங்கள் மற்றும் சிவில்...

2026-07-16 15:33:42
news-image

83 சதவீத சிறைச்சாலை உயர் பதவிகள்...

2026-07-16 15:22:32
news-image

நோர்வூட் தேயிலை தோட்டத்தில் மாணிக்கக் கல்...

2026-07-16 14:50:48
news-image

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணைகள் வெறும் ஊடக...

2026-07-16 14:41:36
news-image

ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம் மீண்டும் திறப்பு

2026-07-16 14:45:43
news-image

புதிய கடற்படைத் தளபதி பிரதமரைச் சந்தித்தார்!

2026-07-16 14:01:41
news-image

யோஷித ராஜபக்‌ஷ, பாட்டி டெய்ஸிக்கு எதிரான...

2026-07-16 13:31:21