முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க வவுனியா மாவட்ட தலைவருமான ஆனந்தவர்மன் எனும் அரவிந்தன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை (07) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2024 மார்ச் மாதம் விடுதலைப் புலிகளை ஊக்கிவிக்கும் வகையில் முகநூலில் பதிவுகள் இட்டதாக அவர் கைதாகி இருந்தார்.
ரிஐடியினரால் குறித்த முகநூல் பதிவு தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்கதக அழைக்கப்பட்ட நிலையில் அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக தடுத்து வைக்ப்பட்டிருந்தார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டு பல வருடங்களாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்து நீதிமன்ற உத்தரவுககமைய அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதன்பின் வவுனியாவில் அவர் வசித்து வந்ததுடன் போராளிகள் நலன்புரிச் சங்கம் என்ற அமைப்பாக செயற்பட்டு வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM