பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ்த்தரப்பு பொதுவேலைத்திட்டத்தின்கீழ் ஒன்றிணையவேண்டும் - கஜேந்திரகுமார்

Published By: Vishnu

07 Jul, 2025 | 07:46 PM
image

(நா.தனுஜா)

பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் பொதுவேலைத்திட்டமொன்றின்கீழ் ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த்தேசியப்பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளுராட்சிமன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ்த்தேசிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தது. அதன்பிரகாரம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் கொள்கை ரீதியிலான இணக்கப்பாடொன்றும் கைச்சாத்திடப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரை காத்திரமான முறையில் கையாளவேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதன் ஊடாகவே அடுத்தகட்டமாக தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்பிரகாரம் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய தரப்புக்கள் ஒத்த நிலைப்பாட்டின்கீழ் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டியது அவசியம் எனவும், அதனை முன்னிறுத்தி தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த்தேசியப்பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பேச்சுவார்த்தைகள் பதவி சார்ந்தவை அல்ல என்பதால், தமிழ்மக்களின் நலனை முன்னிறுத்தி தமிழரசுக்கட்சியும் இதில் பங்கேற்கவேண்டும் என்றும் கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு எதிர்வரும் 11 ஆம் திகதி தமது கட்சியின் மத்திய குழுக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருப்பதாகவும், அதன்போது மேற்குறிப்பிட்ட பேச்சுவார்த்தைகளுக்கான திகதிகள் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ் பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பில் கைது...

2025-12-13 13:43:47
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலன்னறுவை...

2025-12-13 15:25:09
news-image

நான்கு பேருடன் பயணித்த வேன் கால்வாயில்...

2025-12-13 13:27:28
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பான தகவல்களைப்...

2025-12-13 15:00:57
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-12-13 14:36:56
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் 590...

2025-12-13 14:39:38
news-image

15 வயது மாணவி மீது பாலியல்...

2025-12-13 12:29:31
news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:45:21
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 14:54:39
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30