உணவுகளை பரிசோதனை செய்வதற்கான ஆய்வுகூடவசதிகள் வடக்கில் இல்லை - யாழ் பிராந்திய சுகாதாரவைத்திய அதிகாரி வைத்தியர் கேதீஸ்வரன்

07 Jul, 2025 | 10:22 PM
image

(எம்.நியூட்டன்)

உணவுகளை பரிசோதனை செய்வதற்கான ஆய்வுகூடவசதிகள் வடக்கு மாணத்தில் இல்லை  இது தேசிய ரீதியிலான பிரச்சினையாக உள்ளது இதனை நிறுவுவதற்கு அரசாங்கம் யூ என் நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருகிறது என யாழ்பிராந்திய வைத்திய அதிகாரி வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். 

இலங்கையில் உணவுப் பாதுகாப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து யாழ் மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான  விழிப்புணர்வு செயலமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 

யாழ் மாவட்டத்தில் உணவு கையாளும் விடயத்தில் நாம் இறுக்கமான நடைமுறை என்பதை கூறுகிறார்கள் ஆனால் இதற்கான பிரதான காரணமாக ஆனையிறவில் இருந்து யாழ் மாவட்டத்தில் நிலத்தடி நிர் குறிப்பாக சுண்ணாம்பு பாறையில் விலகல் ஏற்படுவதன் காரணமாக நிலத்தடி நீர் பாதிப்படையூம் சந்தர்பம் அதிகமாக இருக்கிறது இதனால் தொற்று நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. 

 இதன் காரணமாக நாம் சுகாதார ரீதியில் இறுக்கமான நடவடிக்கைகளை பின்பற்றவேண்டிய தேவை உள்ளது . இதனால் பாதிப்பைவதாக சிலர் கூறுகிறார்கள் ஆனால் பலரும் இதனால் இலாபகரமானதகவே உள்ளதாக எமக்கு கூறுகிறார்கள்  பொதுமக்கள் உணவகங்களுக்கு நம்பிசெல்லுகிறார்கள். 

உணவகங்களின் தரம் , தூய்மை சுகாதாரம் , காலாவாதியான உணவு பொருட்கள் விற்பனை தொடர்பில் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் முறைப்பாடு தெரிவிக்கலாம் என்றார். 

இந் நிகழ்வில் சுகாதார மற்றும்  வெகுஜன ஊடக அமைச்சின்  மேலதிக செயலாளர் என்.ஏ.கே.விஜேநாயக்க, சுகாதார மற்றும்  வெகுஜன ஊடக அமைச்சின் பணிப்பாளர் ஜெயந்த, தேசிய கல்வி நிறுவகத்தின் இலத்திரனியல் விரிவாக்கல் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி  சிறி பிருந்திரன் ,சுகாதார அமைச்சின் பிரதம உணவு மற்றும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி சுதர்சன்,  மற்றும் துறைசார் அதிகாரிகள்  , ஐக்கிய நாடுகள் சபையின்  உணவு மற்றும் விவசாய அமைப்பின் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்னுடன் மலேசிய...

2026-07-18 14:53:23
news-image

சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில்...

2026-07-18 14:41:15
news-image

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன்...

2026-07-18 13:12:46
news-image

10 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத்...

2026-07-18 13:11:53
news-image

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால்...

2026-07-18 13:09:43
news-image

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் ஆசி பெற்றார்...

2026-07-18 12:34:33
news-image

நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த காற்று...

2026-07-18 12:23:27
news-image

25 ஆண்டுகள் பழமையான கொலை வழக்கு...

2026-07-18 11:44:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை...

2026-07-18 11:07:56
news-image

பெண்களின் திறன்களை வெளிக்கொணர்வதில் CCWE வழங்கும்...

2026-07-18 11:09:56
news-image

வவுனியாவில் விபத்து: நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன்...

2026-07-18 10:00:56
news-image

உடலுக்குள் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து கடத்தி...

2026-07-18 09:44:20