'நீர்த்த கடல்' ஆவணப்படம் மட்டக்களப்பில் திரையிடப்பட்டது

Published By: Digital Desk 2

07 Jul, 2025 | 10:19 PM
image

மட்டக்களப்பில் அமைந்துள்ள Movie Club அமைப்பின் ஒழுங்கமைப்பில், எழுநாவால் தயாரிக்கப்பட்ட ‘நீர்த்த கடல்’ ஆவணப்படம் 2025 ஜூன் 21 சனிக்கிழமை, பிற்பகல் 4.00 மணிக்கு American Corner-இல் திரையிடப்பட்டது.

சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன்கள் குறித்து மையம்கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில், பலர் பங்கேற்று, விவாதங்களை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பார்வையாளர்களில் ஒருவரான கேஷாயினி எட்மண்ட், “இது காலத்தின் தேவை எனும் பார்வையுடன் உருவாக்கப்பட்ட ஆவணப்படம். காட்சியமைப்புகள் நன்றாக இருந்தன. குறிப்பாக, இதன் சாரம் கொண்ட நூலாசிரியரின் நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது,” எனத் தெரிவித்தார்.

அவரது மேலதிக கருத்தில், "ஆவணப்படத்தின் நேரத்தை சுருக்கி, தொழில்நுட்ப தரம் மேம்படுத்தப்பட வேண்டும். மேலும், பெண்கள் மற்றும் பல்வேறு சமூகக் குழுக்களின் பார்வைகளும் இதில் இடம்பெற வேண்டும்," எனவும் சுட்டிக்காட்டினார்.

இத்தயாரிப்பில், வடக்கு – கிழக்கு தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் என்ற போர்வையில் ஏற்படுத்தப்படும் கடலட்டை வளர்ப்பு பண்ணைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 

இது தமிழ் மக்களின் கடல்சார்ந்த வாழ்வாதாரமும், மீன் மற்றும் கடல்வள மீதான உரிமையும், சூழலியல் சமநிலையும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை வெளிக்கொணர்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44