குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைப்பதற்கான சூட்சமக் குறிப்பு..!

Published By: Digital Desk 2

07 Jul, 2025 | 04:51 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் ஜோதிடர்களை சந்தித்து பிரச்சினைகளை சொல்லி அதற்கான நிவாரணத்தை கேட்கிறார்கள். அவர்களும் சில பரிகாரங்களை பரிந்துரைக்கிறார்கள்.

நாமும் அதனை மேற்கொண்டு, பலனை எதிர்பார்க்க தொடங்குகிறோம். ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை.

இது தொடர்பாக வேறொரு அனுபவம் மிக்க ஆன்மீக முன்னோர்களிடம் கலந்து உரையாடும் போது அவர்கள் திடீரென்று உங்களுடைய குலதெய்வம் என்ன? என்றோ உங்களுடைய குலதெய்வ கோயிலுக்கு எப்போது சென்று வந்தீர்கள்? என்றோ அல்லது உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் குலதெய்வ ஆலய வளாகத்தில் ஓர் இரவு தங்கி அடுத்த நாள் அபிஷேகம், அலங்காரம் செய்து வந்திருக்கிறீர்களா? என கேட்பார்கள்.

இதற்கான பதில் பெரும்பாலானவர்களுக்கு இருப்பதில்லை. இந்நிலையில் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைப்பதற்கு எம்முடைய ஆன்மீகம் முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

இதற்கு தேவையான முதன்மையான பொருட்கள் : சுத்தமான- இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நல்லெண்ணெய் மற்றும் கரும்புச்சாறு.

குலதெய்வ ஆலயத்திற்கு எம்மில் பலரும் சென்று வணங்குவர். மாலை அணிவித்து வணங்குவர். அர்ச்சனை செய்வார்கள். அன்னதானமும் செய்வார்கள்.

சிலர் அபிஷேகம் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆனால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்றால் அந்த குலதெய்வம் குடி கொண்டிருக்கும் ஆலய வளாகத்திற்குள் ஒரு இரவு தங்கி, அடுத்த நாள் காலை நீங்கள் எடுத்துச் சென்றிருக்கும் சுத்தமான இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நல்லெண்ணையை அபிஷேகத்திற்கு தாருங்கள். அதனைத் தொடர்ந்து கரும்பு சாற்றினையும் அபிஷேகத்திற்கு தாருங்கள். இந்த இரண்டையும் ஏனைய அபிஷேக பொருட்களுடன் இணைத்து அபிஷேகம் செய்யுமாறு சொல்லுங்கள்.

ஏனெனில் நல்லெண்ணெய் உங்களுடைய கர்ம வினையை குறைக்கும். கரும்புச்சாறு இந்த பிறவியில் நீங்கள் பெறுவதற்கு தகுதியான நல்ல பலன்களை விரைவாகவும், நிறைவாகவும் தரும் வல்லமை படைத்தவை.

அதனால் இந்த இரண்டையும் மறவாமல் அபிஷேகத்துடன் அபிஷேகத்திற்கு தந்து, அபிஷேகம் செய்து, புதிய வஸ்திரமுபம்,  பூமாலையையும் சாற்றி குலதெய்வத்தை வழிபடுங்கள்.

அதன் பிறகு நீங்கள் நிவேதனமாக படைத்திருக்கும் பிரசாதத்தை அங்கு வருகை தந்திருக்கும் பக்தர்களுக்கு தானமாக வழங்குங்கள். இதனைத் தொடர்ந்து ஐந்து மாதங்கள் வரை செய்தால் உங்களுக்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது உறுதி.

குறிப்பு : நீங்கள் பிறந்த கிழமை, நீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் இருந்து ஆறாவது நட்சத்திரம் வரும் தினம் , நீங்கள் பிறந்த நட்சத்திரம் ,ஆகிய தினங்களில் குல தெய்வத்திற்கான அபிஷேகத்தை தெரிவு செய்வது சிறப்பு.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணி விற்பனை மூலம் அனுகூலம் பெறுவதற்கான...

2026-07-20 17:07:47
news-image

வாஸ்து தோஷமற்ற காலி காணி வாங்குவதற்கான...

2026-07-18 16:01:41
news-image

ஆடி மாதம் என்ன செய்யலாம்?

2026-07-17 16:06:56
news-image

தனவந்தராக வளர்வதற்குரிய சூட்சம குறிப்பு..!

2026-07-16 17:17:34
news-image

வாராகி அம்மனின் அருள் கிடைப்பதற்கான விசேட...

2026-07-15 15:02:03
news-image

கணவன் - மனைவி இடையேயான கருத்து...

2026-07-14 17:26:25
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக வழிபாடு!

2026-07-13 17:20:07
news-image

கர்மா தொடர்பான கெடுபலன் குறைவதற்கான எளிய...

2026-07-11 16:58:36
news-image

தடையற்ற வருவாய் கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-07-10 15:21:24
news-image

நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம...

2026-07-09 18:36:55
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2026-07-08 14:58:00
news-image

வாராகி அம்மனுக்குரிய பிரத்யேக தீப வழிபாடு

2026-07-07 17:13:45